உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பா.ஜ., எம்.எல்.ஏ.,க்கள் சஸ்பெண்ட்

பா.ஜ., எம்.எல்.ஏ.,க்கள் சஸ்பெண்ட்

புதுடில்லி:டில்லி சட்டசபையில் கூச்சலிட்ட பா.ஜ., எம்.எல்.ஏ.,க்கள் அனைவரும் மூன்று நாட்களுக்கு சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.டில்லி சட்டசபை நேற்று கூடியதும், பா.ஜ., எம்.எல்.ஏ.,க்கள் அனைவரும், காமன்வெல்த் ஊழலில் முதல்வர் ஷீலா தீட்சித்தின் பெயர் அடிபடுவதால் இது குறித்து அவர் விளக்கம் அளிக்க வேண்டும் என, கோஷம் போட்டனர். இதனால், சபை அரை மணி நேரம் ஒத்தி வைக்கப்பட்டது.மீண்டும் சபை கூடியதும் பா.ஜ., உறுப்பினர்கள் இதே கோரிக்கை வற்புறுத்தி, சபாநாயகர் யோகானந்த் சாஸ்திரி இருக்கை அருகே சென்று கோஷம் போட்டனர்.சபையை நடத்த விடாமல் கூச்சல் போடும் உறுப்பினர்களை சபையிலிருந்து வெளியேற்றும் படி கல்வி அமைச்சர் அர்விந்தர் சிங், சபாநாயகரிடம் முன்மொழிந்தார். இதை ஏற்றுக்கொண்ட சபாநாயகர், பா.ஜ., உறுப்பினர்கள், 24 பேரை, சபையிலிருந்து வெளியேற்றும் படி உத்தரவிட்டார்.எதிர்க்கட்சித் தலைவர் வி.கே.மல்கோத்ரா உள்ளிட்ட, 24 எம்.எல்.ஏ.,க்கள், சபையிலிருந்து வெளியேற்றப்பட்டனர். இவர்கள் அனைவரையும் மூன்று நாட்களுக்கு சபாநாயகர் சஸ்பெண்ட் செய்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ