அ.தி.மு.க., துணைச்செயலர் வெட்டிக்கொலை
புதுச்சேரி: புதுச்சேரியில் அ.தி.மு.க., துணைச்செயலர் வெட்டிக்கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரி முதலியார் பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் கந்தன் என்ற கந்தசாமி (41). இவர் அப்பகுதி அ.தி.மு.க., துணைச்செயலராக இருந்தார். இந்நிலையில், இன்று மாலை அவரது வீட்டிற்குள் நுழைந்த கும்பல் ஒன்று, படுக்கையறையில் இருந்த கந்தனை சரமாரியாக வெட்டிக் கொன்றது. கொலையை தடுக்க முயன்ற கந்தனின் மாமனாருக்கும் வெட்டு விழுந்தது. அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடந்திருக்கலாம் என கூறப்படுகிறது.