உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மணிசங்கர் பேச்சு முட்டாள்தனமானது

மணிசங்கர் பேச்சு முட்டாள்தனமானது

ஜெய்ப்பூர்:“ராஜிவ் பற்றிய மணிசங்கர் அய்யர் பேச்சு முட்டாள்தனமானது,” என, ராஜஸ்தான் முன்னாள் முதல்வர் அசோக் கெலாட் தெரிவித்துள்ளார்.ராஜிவ் பற்றி காங்கிரஸ் மூத்த தலைவர் மணிசங்கர் அய்யர் பேசிய, 'வீடியோ'வை பா.ஜ.,வின் அமித் மால்வியா நேற்று முன்தினம் வெளியிட்டார். அதில், 'ராஜிவ் பிரதமரானபோது, பல்வேறு தரப்பினரும் வெவ்வேறு விதமாக யோசித்தனர். ஆனால், லண்டனில் இரண்டு முறை பட்டப்படிப்பில் பெயில் ஆன விமான ஓட்டி, பிரதமரானதாகத்தான் நான் நினைத்தேன்' என, குறிப்பிட்டுள்ளார்.இது, காங்கிரசார் இடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து ராஜஸ்தான் முன்னாள் முதல்வர் அசோக் கெலாட் கூறுகையில், “ராஜிவ் குறித்த மணிசங்கரின் கருத்து விரக்தியின் உச்சத்தை பிரதிபலிக்கிறது. எனவே தான் என்ன பேசுகிறோம் என்பது அவருக்கு தெரியவில்லை. முட்டாள்தனமாக பேசுபவர் மட்டுமே ராஜிவ் பற்றி இப்படி சொல்ல முடியும்,” என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி