உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / நாட்டின் 140 கோடி மக்களும் எனக்கு கடவுள்: பிரதமர் மோடி பேச்சு

நாட்டின் 140 கோடி மக்களும் எனக்கு கடவுள்: பிரதமர் மோடி பேச்சு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: நாட்டின் 140 கோடி மக்களும் எனக்கு கடவுளை போன்றவர்கள் என பிரதமர் மோடி கூறினார்.டில்லியில் பிரதமர் அலுவலகத்தில் அதிகாரிகள் மத்தியில், மோடி பேசியதாவது: நான் அதிகாரத்திற்காகவும், பதவிக்காகவும் பிரதமர் பொறுப்பிற்கு வரவில்லை. நாட்டின் 140 கோடி மக்களும் எனக்கு கடவுளை போன்றவர்கள். எனது உடல் மற்றும் மனம், ஆத்மா அனைத்தும் மக்களுக்கு பணியாற்றும் தன்மையுடையது. நாட்டின் வளர்ச்சிக்கு ஊக்கமளிக்கும் வகையில் பிரதமர் அலுவலகம் பணியாற்ற வேண்டும். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=6o33579a&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0

முயற்சி

நாளை செய்வோம் என்று எதையும் தள்ளி போடாமல், இன்றே பணிகளை மேற்கொள்ள வேண்டும். 30 ஆண்டுகளாக சோர்வின்றி எப்படி பணியாற்றுகிறீர்கள் என்ற கேள்வியை மக்கள் முன் வைக்கிறார்கள். சர்வதேச அளவில் முன்னேறும் முயற்சிகளில் நாம் உடனடியாக ஈடுபட வேண்டும். எனக்குள் உள்ள கற்றுக்கொள்ளும் ஆர்வத்தை உயிர்ப்புடன் வைத்திருப்பதே என் ஆற்றலுக்கு காரணம்.

புதிய ஆற்றல்

அரசாங்கம் என்பது வலிமை, அர்ப்பணிப்பு மற்றும் தீர்மானங்களின் புதிய ஆற்றல். எங்கள் குழுவை பொறுத்தவரை, நேரக்கட்டுப்பாடு, சிந்தனை வரம்புகளோ இல்லை. முயற்சி களுக்கான நிலையான அளவுகோல் எதுவும் இல்லை. நான் பணியாற்றுவதற்காக பிறந்துள்ளேன், ஓய்வு எடுப்பதற்காக அல்ல. நான் சோம்பேறியாக எப்போதும் இருப்பதில்லை. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 19 )

Kasimani Baskaran
ஜூன் 11, 2024 00:37

பாவாடைகளுக்கு ஒரே எரிச்சல் போல தெரிகிறது.


கனோஜ் ஆங்ரே
ஜூன் 11, 2024 11:30

எங்களுக்கு ஏன்யா எரியப் போவுது...? நாங்க பார்த்து சிரிச்சுகிட்டே இருக்கோம்... சந்தோஷமா இருக்கோம்...


Priyan Vadanad
ஜூன் 10, 2024 22:26

முட்டு கொடுக்கவும், பட்டி பார்த்து பெயிண்ட் அடிக்கவும், டிங்கரிங் வேலை பார்க்கவும் தங்களையே அர்ப்பணித்து கொண்ட தொண்டரபொடியாழ்வார்கள் எங்கே போய் ஒளிஞ்சிகிட்டாங்கன்னு தெரியவில்லை.


Priyan Vadanad
ஜூன் 10, 2024 22:19

பரமாத்மாவின் வாரிசு இப்படியெல்லாம் புலம்பும்படி தேர்தல் செய்துவிட்டது./ பாவம்.


Thirumal s S
ஜூன் 10, 2024 21:40

பொய் சொல்றார்


Anantharaman Srinivasan
ஜூன் 10, 2024 20:52

நாட்டின் 140 கோடி மக்களும் எனக்கு கடவுள்: பிரதமர் மோடி பேச்சு... மேடை பேச்சில் கில்லாடியான நம் கருணாநிதியை மிஞ்சி விட்டார்..


Anantharaman Srinivasan
ஜூன் 10, 2024 20:47

மேடைக்கு மேடை மைக் பிடித்து மாற்றி மாற்றி பேசுபவரையே பெரும்பான்மை மக்கள் விரும்பி தேர்ந்தெடுத்துள்ளனர். அவரை உண்மையென நம்பி பின் தொடரும் கூட்டமே அவருக்குத்தேவை. அவரின் ஒவ்வொரு பேச்சையும் கூர்ந்து கவனித்து கேள்வி கேட்பவன் முட்டாளாக சித்தரிக்கப்படுகிறான்.. என்ன செய்வது. இந்திய நாட்டின் தலைவிதி..


Ramesh Sargam
ஜூன் 10, 2024 20:45

தேசதுரோக எதிர்க்கட்சியினர் கூடவா...?


கோதண்டபாணி
ஜூன் 10, 2024 20:19

மக்கள் தொகை 150 கோடியை தாண்டியாச்சு. சென்சஸ் எடுத்தாத்தானே தெரியும்?


ஆராவமுதன்
ஜூன் 10, 2024 20:16

உ.பி கடவுள்களே நிராகரித்துவிட்டார்கள். புதுசு புதுசா டயலாக் உடாதீங்க. நீங்க மக்களை விட்டு பதவி வெறிக்கு தாவி ரொம்ப நாளாச்சு.


Rajah
ஜூன் 10, 2024 19:14

நான் கடவுள் என்று அவர் சொல்லவில்லை.அதைச் சொன்னது டைரக்டர் பாலா. கடவுளால் அனுப்பப்பட்டவர் என்றுதான் சொன்னார். நீங்களும் நானும்தான் கடவுளால் அனுப்பப்பட்டவர்கள். முதலில் இதைச் சொல்வதற்கு இறை நம்பிக்கை தேவை. அது இல்லாதவர்கள் எதையும் பேசுவார்கள். திராவிட சித்தாந்தம் பேசுபவர்கள் எதையும் திரித்துப் பேசுவதில் வல்லபர்கள். சட்டப் பேரவையில் எவ்வளவு வசைகளும் அதற்கு புதிய விளக்கங்களும் கொடுத்ததை நாம் கண்டிருக்கின்றோம்.


Vathsan
ஜூன் 10, 2024 20:19

அதில் நடித்தவர் மோடி அல்ல. நடிகர் ஆர்யா... அட போங்க சார்.


மேலும் செய்திகள்









புதிய வீடியோ