உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இந்தூரில் நோட்டாவுக்கு விழுந்த 2 லட்சம் ஓட்டு; 2வது இடத்தையும் பிடித்தது

இந்தூரில் நோட்டாவுக்கு விழுந்த 2 லட்சம் ஓட்டு; 2வது இடத்தையும் பிடித்தது

இந்தூர்: ம.பி.,யின் இந்தூர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் கடைசி நேரத்தில் பா.ஜ., பக்கம் தாவியதால், பெரும்பாலான மக்கள் நோட்டாவுக்கு ஓட்டளித்தனர். இதனால் 2 லட்சத்திற்கு மேற்பட்ட ஓட்டுகள் நோட்டாவுக்கு விழுந்தன.மத்திய பிரதேசத்தில் உள்ள இந்தூர் தொகுதிக்கு மே 13ல் ஓட்டுப்பதிவு நடைபெற்றது. தேர்தலுக்கு முன்னதாக இந்த தொகுதியில் காங்கிரஸ் சார்பில் அக்சய் கன்டி வேட்பு மனு தாக்கல் செய்தார். மனு பரிசீலனையின்போது தனது வேட்பு மனுவை வாபஸ் பெற்ற அவர், திடீரென பா.ஜ., பக்கம் தாவினார். அதேநேரத்தில் காங்கிரசின் மாற்று வேட்பாளர்களின் மனுவும் நிராகரிக்கப்பட்டன. இதனால் காங்கிரஸ் சார்பில் அந்த தொகுதியில் போட்டியிட முடியாத சூழல் ஏற்பட்டது. இது பா.ஜ.,வுக்கு சாதகமாக பார்க்கப்பட்டது.இதனால், நோட்டாவுக்கு ஓட்டளிக்குமாறு காங்கிரஸ் கோரிக்கை வைத்தது. இந்த நிலையில், இன்று (ஜூன் 4) நடைபெற்ற ஓட்டு எண்ணிக்கையில் எதிர்பார்க்கப்பட்டதை போல, பா.ஜ., வேட்பாளர் சங்கர் லால் வாணி தொடர்ந்து முதலிடத்தில் நீடித்து வருகிறார். நோட்டாவுக்கு 2 லட்சத்திற்கு மேற்பட்ட ஓட்டுகள் கிடைத்துள்ளன. அதுமட்டுமல்ல, அந்த தொகுதியில் நோட்டா 2வது இடத்தையும் பிடித்துள்ளது. மற்ற வேட்பாளர்கள் அனைவரும் டெபாசிட் இழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Lion Drsekar
ஜூன் 04, 2024 15:34

அருமை, தான் வாழ தன குடும்பம் வாழ்வதற்காக ஒரு கட்சி , பதவி, பணத்துக்காக எந்த ஒரு கொள்கையுமே இல்லாமல் பிழைப்பு நடத்த மனிதன் எதில் இருந்து வந்தானோ அதே வாழ்க்கையை நாகரீக உலகில் பின்பற்றினால் இதுதான் கதி, அந்த மக்களுக்கு கோவில் கட்டவேண்டும், வந்தே மாதரம்


raja
ஜூன் 04, 2024 14:21

தமிழனுக்கு என்ன புண்ணியம் கேன்டீன் டோக்கன்களால்...


தமிழ்
ஜூன் 04, 2024 15:05

உன்னால் யாருக்கு என்ன பிரயோஜனம்.


மேலும் செய்திகள்









புதிய வீடியோ