தலைநகர் பகுதியில் 243 பறவையினங்கள்
புதுடில்லி:தேசிய தலைநகர் பிராந்தியத்தில் 243 பறவை இனங்கள் இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது.தலைநகர் டில்லியில் அசோலா வனவிலங்கு சரணாலயம் மட்டுமே உள்ளது. இதுவே பறவைகளுக்கும் புகலிடமாக விளங்குகிறது.நகருக்குள் பறவையினங்கள் வாழ்வதற்கான சூழலை உறுதி செய்வதற்கான பணிகளை சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மேற்கொண்டு வருகின்றனர். அதன் ஒருபகுதியாக பறவையினங்களை கணக்கிடும் பணி மேற்கொள்ளப்பட்டது.இந்த பணியில் தேசிய தலைநகர் பிராந்தியத்தில் 243 பறவையினங்கள் கண்டறியப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு நடந்த கணக்கெடுப்பில், 234 பறவையினங்கள் இருந்தன. தற்போது பறவையினங்கள் கூடுதலாக கண்டறியப்பட்டுள்ளது, சுற்றுச்சூழல் ஆர்வலர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.