உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அசாமில் வெள்ளப்பெருக்கு 24.5 லட்சம் பேர் பாதிப்பு

அசாமில் வெள்ளப்பெருக்கு 24.5 லட்சம் பேர் பாதிப்பு

குவஹாத்தி, அசாமில் தொடர் கனமழையால், 30 மாவட்டங்களை வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதன் காரணமாக, 24.5 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். வடகிழக்கு மாநிலமான அசாமில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழையால், பிரம்மபுத்ரா மற்றும் அதன் துணை ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தண்ணீர் அபாய அளவை தாண்டி பாய்வதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கரையோரங்களில் வசித்த 40,000க்கும் மேற்பட்டோரை பாதுகாப்பாக அப்புறப்படுத்தி, நிவாரண முகாம்களில் அதிகாரிகள் தங்க வைத்துள்ளனர்.மழை வெள்ளத்தால் 30 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இதுவரை 24.5 லட்சம் பேர் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கின்றனர். துாப்ரி மாவட்டம் கடும் சேதத்திற்கு உள்ளாகியுள்ளது. இங்கு வசிக்கும் 7.75 லட்சத்திற்கும் மேற்பட்டோர் வெள்ளத்தில் சிக்கியுள்ளனர். அவர்களை மீட்கும் பணியில் தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படையினர் ஈடுபட்டுஉள்ளனர்.இதுவரை கனமழையால் 225 சாலைகளும், 10 பாலங்களும் சேதமடைந்துள்ளன. இந்த ஆண்டு மட்டும் புயல், வெள்ளம் மற்றும் நிலச்சரிவு என இதுவரை மொத்தம் 64 பேர் பலியாகி உள்ளதாக மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.இதற்கிடையே, மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில், முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா நேரில் ஆய்வு மேற்கொண்டார். அதன்பின் செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், “பாதிக்கப்பட்ட பகுதிகளில் போர்க்கால அடிப்படையில் மீட்பு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறோம். பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்து, அவற்றிற்கு உடனடியாக தீர்வுகாணும் முயற்சிகள் எடுக்கப்படுகின்றன,” என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ