உத்தரகண்ட் பனிப்புயலில் சிக்கிய 57 பேரில் 32 பேர் மீட்பு!
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
சமோளி: உத்தரகண்டில் பனிப்புயலில் சிக்கிய 57 ஊழியர்களில் 32 பேர் மீட்கப்பட்டுள்ளனர். எஞ்சியவர்களை மீட்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்தோ - திபெத் எல்லை அருகே உள்ள உத்தரகண்டின் சமோளி மாவட்டத்தின் மனா கிராமத்தில் திடீர் பனிப்புயல் ஏற்பட்டுள்ளது. சாலை பணியில் ஈடுபட்டிருந்த 57 ஊழியர்கள் இந்த பனிச்சரிவில் சிக்கினர்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=jxdpyu64&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இது குறித்து தகவல் அறிந்து, மாநில பேரிடர் மீட்பு குழு, தேசிய பேரிடர் மீட்பு குழு, மாவட்ட நிர்வாகம் மற்றும் இந்தோ -திபெத் எல்லை போலீசார் உள்ளிட்டோர் மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். பனிப்புயலில் மொத்தம் 57 பேர் சிக்கியதில், 32 பேர் மீட்கப்பட்டுள்ளனர். மீதமுள்ள 25 பேரை மீட்கும் பணியில் பேரிடர் மேலாண் துறையினர் ஈடுபட்டுள்ளனர்.உத்தரகண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள மலைப் பகுதிகளுக்கு கனமழைக்கான எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.