-தாறுமாறாக ஓடிய லாரி மோதி 5 பேர் காயம்
புதுடில்லி:அதிவேகமாக வந்த லாரி, சாலையின் தடுப்புச் சுவரைத் தாண்டி கார் மீது மோதியதில், ஐந்து பேர் காயம் அடைந்தனர்.வடகிழக்கு டில்லி சீலம்பூரில் நேற்று அதிகாலை, 12:00 மணிக்கு, 'டாடா 407 லாரி' அதிவேகமாக வந்தது. புட்டா சாலையில் வந்தபோது டிரைவர் கட்டுப்பாட்டை இழந்த லாரி, சாலைத் தடுப்புச் சுவரில் மோதி எதிர்திசையில் வந்து கொண்டிருந்த கார் மீது மோதியது.அதைத் தொடர்ந்து தாறுமாறாக ஓடிய லாரி, சாலையோரத்தில் ஐஸ்கிரீம் சாப்பிட்டுக் கொண்டிருந்தவர்கள் மீது மோதியது. நியூ சீலம்பூரைச் சேர்ந்த நூரி,27, அப்சாரி,55, ஹசீன் என்ற சோனு,25, மெஹக்,18, மற்றும் பூல்பி,25 ஆகிய, ஐந்து பேரும் காயம் அடைந்த நிலையில் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். தகவல் அறிந்து வந்த போலீசார், லாரியை பறிமுதல் செய்து டிரைவரை கைது செய்தனர்.