உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / டில்லியில் 85 ஆயிரம் வழக்குகள் நிலுவை

டில்லியில் 85 ஆயிரம் வழக்குகள் நிலுவை

புதுடில்லி: தலைநகர் டில்லியில், குற்றச் செயல்கள் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில், டில்லி போலீசில் கடந்த மூன்றரை ஆண்டுகளில் பதிவான, 1 லட்சத்து, 81 ஆயிரம் வழக்குகளில், இதுவரை, 85 ஆயிரம் வழக்குகள் தீர்க்கப்படாமல் நிலுவையில் உள்ளன. டில்லியில், அதிகரித்து வரும் குற்றங்கள் குறித்தும், அவற்றை தீர்க்க முடியாமல் இருப்பது பற்றியும், உயர் அதிகாரி ஒருவர் கருத்து தெரிவித்தார். அப்போது அவர் கூறியதாவது: டில்லியில், கடந்த மூன்றரை ஆண்டுகளில் மட்டும், 1 லட்சத்து, 81 ஆயிரத்து, 797 வழக்குகள், போலீஸ் நிலையங்களில் பதிவாகியுள்ளன. இதில், 96 ஆயிரத்து, 201 வழக்குகள் மட்டுமே, விசாரிக்கப்பட்டு துப்பு துலங்கி தீர்த்து வைக்கப்பட்டுள்ளது. 85 ஆயிரத்து, 596 வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதற்கு காரணம், தடயவியல் சோதனை அறிக்கை கிடைப்பதில் தாமதம், புகார் கொடுத்தவர்களின் ஒத்துழைப்பு இல்லாமை போன்றவையே. இவ்வாறு அந்த அதிகாரி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ