உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கர்நாடகா கவர்னர் நடுநிலையுடன் செயல்படுங்க: துணை முதல்வர் சிவக்குமார் வலியுறுத்தல்

கர்நாடகா கவர்னர் நடுநிலையுடன் செயல்படுங்க: துணை முதல்வர் சிவக்குமார் வலியுறுத்தல்

பெங்களூரு: முதல்வர் சித்தராமையா மீது ஊழல் வழக்கு தொடர அனுமதி அளித்த கவர்னரை கண்டித்து, காங்கிரசார் இன்று 'ராஜ்பவன் சலோ' முற்றுகை போராட்டம் நடத்தினர். கவர்னரை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் பதாகைகள் ஏந்தி பேரணி நடத்தினர். முன்னதாக கவர்னர் உடனான ஆலோசனை கூட்டத்தை முதல்வர் சித்தராமையா புறக்கணித்து விட்டார். போராட்டத்தில் பங்கேற்ற துணை முதல்வர் சிவக்குமார், 'கவர்னர் தாவர்சந்த் கெலாட் பாரபட்சமாக செயல்படுகிறார். கவர்னர் நடுநிலையுடன் செயல்பட வேண்டும். அரசியலமைப்பு சட்டப்படி கவர்னர் செயல்பட வேண்டும்' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Iyer
ஆக 31, 2024 23:29

மும்பை நகரில் லக்ஷக்கணக்கானோர் வீடில்லாமல் சேரிகளில் வசிக்கின்றனர். அதே மும்பையில் டி கே சிவகுமார் க்கு சொந்தமான பேனாமி பெயரில் உள்ள 125 சொகுசு அப்பார்ட்மெண்டுகளை ஈ டி கைப்பற்றியுள்ளது. அப்படிப்பட்ட ஊழல் பேர்வழி கவர்னருக்கு புத்திமதி கூறுகிறார்