உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ராணுவத்திற்கு "அக்னிவீர்" திட்டம் தேவையில்லை: என்கிறார் ராகுல்

ராணுவத்திற்கு "அக்னிவீர்" திட்டம் தேவையில்லை: என்கிறார் ராகுல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சண்டிகர்: ராணுவத்திற்கு 'அக்னிவீர்' திட்டம் தேவையில்லை. இது பிரதமர் அலுவலகத்தால் உருவாக்கப்பட்ட திட்டம் என காங்கிரஸ் எம்.பி., ராகுல் கூறினார்.ஹரியானா மாநிலம் மகேந்திரகரில் நடந்த பொதுக்கூட்டத்தில் ராகுல் பேசியதாவது: விவசாயிகளின் கடனை நரேந்திர மோடி தள்ளுபடி செய்யவில்லை. அதானி, அம்பானி போன்ற கோடீஸ்வரர்களின் கடனை தள்ளுபடி செய்துள்ளனர். இண்டியா கூட்டணி ஆட்சிக்கு வந்த பின் விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்யும்.பாரத் ஒற்றுமை நியாய யாத்திரையின் போது, பணவீக்கம், வேலையில்லாத் திண்டாட்டம், விவசாயிகளின் பிரச்னைகள் பற்றி கேட்டறிந்தேன்.

'அக்னிவீர்' திட்டம்

ஆனால் வேலையில்லா திண்டாட்டம், பணவீக்கம், விவசாயிகளின் பிரச்னைகள் குறித்து ஊடகங்களில் செய்தி வெளியிடுவதில்லை. ராணுவத்திற்கு 'அக்னிவீர்' திட்டம் தேவையில்லை. இது பிரதமர் அலுவலகத்தால் உருவாக்கப்பட்ட திட்டம். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த உடன், இந்த திட்டத்தை குப்பை தொட்டியில் வீசும். இவ்வாறு ராகுல் பேசினார்.

நிலக்கரி ஊழல்

தரம் குறைந்த நிலக்கரியை இந்தோனேசியாவில் கொள்முதல் செய்து, உயர்தர நிலக்கரி என்ற பெயரில் 3 மடங்கு அதிக விலைக்கு 2014ல் தமிழக அரசுக்கு அதானி நிறுவனம் விற்றுள்ளது. 2014ல் அதிமுக ஆட்சியின் போது நிலக்கரின் விலை, தரத்தை உயர்த்தி காட்டுவதற்கு பல்வேறு நாடுகள் வழியாக வருவது போல் அதானி நிறுவனம் போலி ஆவணங்கள் தயாரித்து முறைகேடு செய்துள்ளது என தனியார் செய்தித்தாள் நிறுவனம் கட்டுரை வெளியிட்டு இருந்தது.

ஜூன் 4ம் தேதிக்கு பின் விசாரணை

இது குறித்து எக்ஸ் சமூகவலைதளத்தில் ராகுல் கூறியிருப்பதாவது: அதானி ஊழல் வழக்கில், அமலாக்கத்துறை, சி.பி.ஐ., மற்றும் ஐ.டி உள்ளிட்ட விசாரணை அமைப்புகள் அமைதியாக இருக்க எத்தனை டெம்போக்கள் பயன்படுத்தப்பட்டன?. தரம் குறைந்த நிலக்கரியை அதானி 3 மடங்கு அதிக விலையில் விற்று ஊழல் செய்திருக்கிறார். அதிக விலையில் நிலக்கரியை விற்றதால் பல ஆயிரம் கோடி ரூபாய் கொள்ளையடித்துள்ளார். ஜூன் 4ம் தேதிக்கு பின் ஆட்சி அமைக்க உள்ள இண்டியா கூட்டணி அரசு நிலக்கரி ஊழலை விசாரிக்கும். இவ்வாறு ராகுல் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 39 )

தத்வமசி
மே 25, 2024 14:11

ஒரு நாட்டில் நால்வகைப் படைகள் தவிர மேலும் பலவிதங்களில் படை வீரர்கள் இருப்பார்கள். அதில் அக்னி வீரர்கள் என்கிற பெயரில் ஒரு திட்டம் நாட்டுக்குத் தேவையான மற்றும் இளைஞ்சர்களுக்கு வேலை வாய்ப்பையும் வழங்கும் திட்டம். நாட்டுக்கு தேவையான காலத்தில் உடனடியாக ராணுவ வீரர்களை பற்றாக்குறையை இந்த அக்நிவீரர் திட்டம் போக்கும். நாட்டில் வீர்களின் எண்ணிக்கை அதிகமாகும். எதிரி நாடும் இதை கருத்தில் எடுத்துக் கொண்டு தான் வேலை செய்யும். அவ்வாறே நாட்டின் இளைஞ்சர்களிடம் நாட்டுப்பற்றையும் வளர்ப்பதாகும். அதனால் காங்கிரஸ் போன்ற எதிர் கட்சிகள் இதை எதிர்க்கிறார்கள். காரணம் இவர்களிடம் தேசப்பற்று இருப்பதாகவே தெரியவில்லை. இருந்தால் முதலில் ஊழல் செய்வார்களா ? நோட்டு அடிக்கிற மிஷினை எதிரி நாட்டுக்கு விர்ப்பார்களா ? நாட்டை மேம்படுத்த ஒரு திட்டமும் எதிர்கட்சிகளிடம் கிடையவே கிடையாது. ஒப்புக்கு ஒரு திட்டம் அவ்வளவு தான். அதில் எவ்வளவு கல்லா கட்டலாம் என்பதிலேயே குறி.


sethu
மே 23, 2024 15:18

சீனா எல்லைக்காவலுக்கு உங்களையும் சேர்த்து உங்கள் குடும்பத்தையும் அனுப்பவேண்டியதுதான் போயா லூஸு


vijay
மே 23, 2024 15:15

நீயும் உன் கட்சியும் என் நாட்டுக்கு தேவை இல்லை, போபோ


Jai
மே 23, 2024 13:41

தமிழ் சமீப காலத்தில் கொண்டு வரப்பட்ட சீர்திருத்தங்களில் முக்கியமானது இந்த அக்னிவீர் திட்டம். இதுபோன்ற சீர்திருத்தங்களில்தான் இந்திய படையை மேம்படுத்த முடியும். இந்திய ராணுவம் மேம்படக்கூடாது என்று நினைப்பவர்கள் இதை ரத்து செய்ய நினைக்கலாம்.


GANESUN
மே 23, 2024 10:35

இந்தியாவுக்கு சொந்த ராணுவம் தேவையில்லை நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் சைனாவுக்கு வருட ஒப்பந்தம் செய்து குடுத்திடுவோம்


kulandai kannan
மே 23, 2024 10:33

நாட்டு இளைஞர்களிடையே நாட்டுப்பற்றும், உடல் வலிமையும் உயர்த்தும் நல்முயற்சிதான் அக்னிவீர் திட்டம். ராகுல் போன்ற வாரிசுகளுக்கு குறைந்தபட்ச ராணுவ சேவை கட்டாயமாக்க வேண்டும்.


R SRINIVASAN
மே 23, 2024 08:16

திரு ராகுல் காந்தி ஆட்சிக்கு வந்தால் என்னென்ன அலங்கோலங்கள் நடக்கும் என்பதை இப்போதே சொல்லிவிட்டார் மேலும் திருபாய் அம்பானியை சட்ட விரோதமாக வளர்த்து பாம்பே டயிங் நஸ்லி வாடியாவை ஒன்றுமில்லாமல் செய்தது உன் பாட்டி இந்திரா அம்மையார் என்பதை ஆடிட்டர் குருமூர்த்தி thuglak இதழில் ல் மிகவும் விரிவாக குறிப்பிட்டிருந்தார்


lana
மே 23, 2024 08:05

எனக்கு என்னவோ இந்த பப்பு காங் தேவை இல்லை என்று தோன்றுகிறது. இருக்கும் 5 ,10 ஓட்டு காணாமல் போய் விடும்


கண்ணன்
மே 23, 2024 06:28

இந்தியாவிற்கு உங்கள் குடும்பம் தேவையில்லை


ராமகிருஷ்ணன்
மே 23, 2024 06:23

அக்னி வீரர்களுக்கு பதிலாக ராகுல் காந்தி சண்டை போட போவாரோ. இந்திய ஆயுதங்களை பாக்கிஸ்தானுக்கு கொடுத்து விடுவார்.


மேலும் செய்திகள்











முக்கிய வீடியோ