உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / என் மீது அட்டாக்: மர்ம நபர் மீது மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் புகார்

என் மீது அட்டாக்: மர்ம நபர் மீது மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் புகார்

பாட்னா: மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் தன்னை அட்டாக் பண்ண வந்ததாக அளித்த புகாரை அடுத்த மர்ம நபர் கைது செய்யப்பட்டார்.மத்திய அமைச்சராக உள்ள கிரிராஜ் சிங்., பீகார் மாநிலம் பாட்னாவில் நடைபெற்ற ஜன்தா தர்பார் என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது மர்ம நபர் ஒருவர் தன்னை தாக்க முயற்சித்ததாக அமைச்சர் போலீசில் புகார் செய்துள்ளார்.இது குறித்து அமைச்சர் கிரிராஜ் புகாரில் தெரிவித்து இருப்பதாவது: பெகுசராய் என்ற இடத்தில் ஜன்தா தர்பார் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது தாடி வைத்த, மெளல்வி போல் உடையணிதந்து வந்த நபர் என்னிடம் ஒரு மனுவுடன் வந்து அதை பார்க்க சொன்னார். ஜன்தா தர்பார் முடிந்து விட்டது. சரியான நேரத்தில் வந்திருக்க வேண்டும். என்று சொன்னேன். அப்போது அவர் எனக்கு எதிராக கோஷம் எழுப்பினார். ஒரு கட்டத்தில் அவர் என்னை தாக்குவார் என்று தோன்றியது. அவர் சரியான முறையில் பேச வில்லை. இதனையடுத்து அங்கு கூடியிருந்தவர்களால் அவர் தாக்கப்பட்டு பின்னர் போலீசிடம் ஒப்படைக்கப்பட்டார் என அமைச்சர் தெரிவித்தார்.தொடர்ந்து எக்ஸ் சமூக வலை தளத்தில் இது போன்ற தாக்குதல்களால் பயப்படப்போவதில்லை என்றும் , சமூக நலன்களுக்காக எப்போதும் பேசுவேன், போராடுவேன். இவர்களின் தாடியையும் தொப்பியையும் கண்டு மகிழ்பவர்கள் பெகுசராய் மற்றும் பீகார் முழுவதிலும் லவ்ஜிகாத் மற்றும் வகுப்புவாத பதட்டத்தை எப்படி உருவாக்குகிறார்கள் என்பதை பார்க்க வேண்டும் என பதிவிட்டு உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ