உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தேவகவுடா பேரனிடம் ரூ.5 கோடி பறிக்க முயற்சி

தேவகவுடா பேரனிடம் ரூ.5 கோடி பறிக்க முயற்சி

ஹாசன் : ம.ஜ.த., -- எம்.எல்.சி., சூரஜ் ரேவண்ணாவை மிரட்டி, ஐந்து கோடி ரூபாய் பறிக்க முயன்றதாக, மர்ம நபர் மீது வழக்குப்பதிவாகியுள்ளது.ம.ஜ.த., - எம்.எல்.சி., சூரஜ் ரேவண்ணா, 36. முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனும், ஹாசன் ஹொளெநரசிபுரா எம்.எல்.ஏ., ரேவண்ணாவின் மகனும் ஆவார்.கடந்த சில தினங்களாக சூரஜிடம் மர்மநபர் ஒருவர் மொபைல் போனில் பேசினார். 'எனக்கு ஐந்து கோடி ரூபாய் பணம் தர வேண்டும்.இல்லாவிட்டால் என்னுடன் இயற்கைக்கு மாறான உடலுறவு கொண்டதாக கூறி, போலீசில் புகார் அளிப்பேன்' என்று மிரட்டி உள்ளார். இதுகுறித்து சூரஜ் ஆதரவாளர் அளித்த புகாரின் பேரில், மர்ம நபர் மீது ஹொளேநரசிபுரா போலீசார் நேற்று வழக்கு பதிவு செய்தனர். விசாரணை நடக்கிறது.சூரஜின் தம்பி பிரஜ்வல் பாலியல் வழக்கில் சிக்கி, சிறைவாசம் அனுபவித்து வருவது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை