| ADDED : மே 13, 2024 05:31 AM
பெங்களூரு: இப்போதெல்லாம் பணத்தை கையில் யாரும் எடுத்து செல்வதில்லை. எதுவாக இருந்தாலும், 'போன் பே' அல்லது கியூ.ஆர்., குறியீடு, ஸ்கேனர் பயன்படுத்தி வருகின்றனர்.பெரிய மால்களாக இருந்தாலும், சிறிய சில்லரை கடையாக இருந்தாலும் பண பரிமாற்றம் செய்ய கியூ.ஆர்., குறியீடு வாயிலாக வழியாகவே வர்த்தகம் நடக்கிறது. இந்த வகையில், பிச்சை எடுப்போர் யாரும் பணம் வைத்திருப்பதில்லை. இதனால், பிச்சை எடுப்பவர்கள் கூட நுாதன முறையை சிந்திக்க துவங்கி விட்டனர். 'பூம்பூம்' மாட்டை வைத்து பிச்சை எடுக்க, அதன் தலையில் கியூ.ஆர்., கோடு ஸ்கேனர் அட்டையை மாட்டி வைத்துள்ளனர். பணம் தருவோர் இதை ஸ்கேன் செய்து, பணத்தை செலுத்துகின்றனர்.