உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மத்திய அமைச்சருடன் செல்பி சசி தரூரால் காங்கிரஸ் எரிச்சல்

மத்திய அமைச்சருடன் செல்பி சசி தரூரால் காங்கிரஸ் எரிச்சல்

புதுடில்லி,பா.ஜ., மற்றும் இடது சாரிகளை பாராட்டி பேசிய காங்கிரஸ் எம்.பி., சசி தரூர், நேற்று மத்திய அமைச்சர் பியுஷ் கோயலுடன் எடுத்த செல்பியை, சமூக வலைதளத்தில் வெளியிட்டு, பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார். கேரளாவின் திருவனந்தபுரம் லோக்சபா தொகுதியின் காங்கிரஸ் எம்.பி., சசிதரூர். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=2b33ygvf&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இவர் சமீபத்தில் அமெரிக்காவில் நடந்த டிரம்ப் மற்றும் பிரதமர் மோடி சந்திப்பை பாராட்டினார். இதற்கு காங்., கட்சிக்குள் எதிர்ப்பு எழுந்தது.அதற்கு விளக்கம் அளித்த தரூர், 'நாட்டு நலனை மனதில் வைத்து பேசினேன். எப்போதும் ஒரு அரசியல்வாதி தன் கட்சியை மனதில் வைத்து பேச முடியாது' என்றார்.அதன்பின் ஆங்கில செய்தித்தாள் ஒன்றுக்கு எழுதிய கட்டுரையில் 'கேரளாவில் இடது ஜனநாயக முன்னணி அரசு பொருளாதாரத்தை வலுப்படுத்த சிறப்பான முயற்சிகளை எடுக்கிறது' என, பாராட்டினார். இதனால், கேரள காங்கிரசார் கொந்தளித்தனர். பா.ஜ.,வின் தகவல் தொழில்நுட்பப் பிரிவு செயலர் அமித் மாள்வியா, 'காங்கிரஸ் தலைவர் தேர்தலில் சோனியா குடும்பம் நிறுத்திய வேட்பாளரான கார்கேவை எதிர்த்து, சசிதரூர் போட்டியிட்டதால், அவரை காங்கிரஸ் ஓரம்கட்டுகிறது' என, கூறியிருந்தார்.இந்நிலையில், மத்திய வர்த்தக அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவரு மான பியுஷ் கோயல் மற்றும் பிரிட்டன் வர்த்தக இணை அமைச்சர் ஜோனாதன் ரெனால்ஸ் உடன் எடுத்த செல்பியை, சசி தரூர் நேற்று சமூக வலைதளத்தில் பகிர்ந்தார். அதில், 'நீண்ட காலமாக இந்தியா - பிரிட்டன் இடையே நிறுத்தப்பட்டிருந்த தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான பேச்சுகள் மீண்டும் துவங்கியுள்ளன. இது மிகவும் வரவேற்கத்தக்கது' என கூறியுள்ளார்.இந்த விவகாரம், காங்கிரஸ் தலைவர்களிடையே எரிச்சலை ஏற்படுத்திஉள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை