உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மக்களுக்கு விஷம் கொடுக்கும் காங்கிரஸ் அரசு: பா.ஜ., புகார்

மக்களுக்கு விஷம் கொடுக்கும் காங்கிரஸ் அரசு: பா.ஜ., புகார்

துமகூரு: ஆட்சிக்கு வந்ததிலிருந்து காங்கிரஸ் அரசு, மாநில மக்களுக்கு விஷம் கொடுப்பதாக, பா.ஜ., -- எம்.எல்.சி., நவீன் குற்றச்சாட்டு கூறியுள்ளார்.துமகூரில் நேற்று அவர் அளித்த பேட்டி:காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததிலிருந்து, மாநில மக்களுக்கு சுத்தமான தண்ணீர் கிடைப்பதில்லை. யாத்கிர், ராய்ச்சூர், ஹொஸ்பேட், கொப்பால், சித்ரதுர்கா ஆகிய பகுதிகளில், அசுத்த குடிநீரால் மக்கள் உயிரிழக்கின்றனர். துமகூரிலும் அசுத்த குடிநீர் பிரச்னை துவங்கிவிட்டது. தண்ணீர் பராமரிப்பு குறித்து, அரசுக்கு துளி கூட அக்கறை இல்லை.ஊரக வளர்ச்சி அமைச்சர் பிரியங்க் கார்கே திறமையற்றவர். தனது துறைக்கு சம்பந்தமில்லாத விஷயங்களை பேசுகிறார். அசுத்த குடிநீர் குறித்து, இதுவரை ஒரு வார்த்தை கூட பேசவில்லை. அசுத்த குடிநீரால் ஏற்படும் உயிரிழப்புகளுக்கு பொறுப்பேற்று, அவர் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்.மக்களின் சுகாதாரத்தை புறக்கணிப்பது குற்றம். மாநில அரசு பஞ்சாயத்துகளுக்கு பணம் தருவதில்லை. மத்திய அரசின் ஜல்ஜீவன் திட்டத்தையும் நிறுத்தி வைத்துள்ளனர். கிராமப்புற மக்களின் நிலை மிகவும் மோசமாக உள்ளது.காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததிலிருந்து மக்களுக்கு விஷம் கொடுத்து வருகிறது. கடந்த ஒரு ஆண்டாக, மக்கள் சிரமத்தை மட்டுமே அனுபவித்து வருகின்றனர். மக்களின் சாபத்தை சம்பாதிக்க வேண்டாம் என்று ஆட்சியாளர்களை கேட்டுக்கொள்கிறேன்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ