உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ரயில் பெட்டியில் வெளியேறிய புகை கட்டுப்படுத்திய கான்ஸ்டபிள் மரணம்

ரயில் பெட்டியில் வெளியேறிய புகை கட்டுப்படுத்திய கான்ஸ்டபிள் மரணம்

முசாபர்பூர்: பீஹாரில், ரயிலின் பெட்டியில் வெளியேறிய புகையை அணைக்க முயன்ற ரயில்வே போலீஸ் கான்ஸ்டபிள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பீஹாரில் முசாபர்பூர் ரயில் நிலையத்தில், வல்சாட் - முசாபர்பூர் இடையே இயக்கப்படும் ரயில் நேற்று நிறுத்தப்பட்டிருந்தது. அதில், பயணியர் யாரும் இல்லாத நிலையில், நேற்று காலை அந்த ரயிலின் ஒரு பெட்டியில் இருந்து புகை வந்தது. அப்போது, அங்கு பணியில் இருந்த ரயில்வே பாதுகாப்பு படையைச் சேர்ந்த கான்ஸ்டபிள் வினோத் யாதவ், அதை கட்டுப்படுத்த முயன்றார். அதற்காக, தீ அணைக்கும் கருவியை எடுத்தபோது எதிர்பாராதவிதமாக அது வெடித்து சிதறியது. இதில், படுகாயமடைந்த அவர் அருகில் இருந்த மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பலத்த காயமடைந்த வினோத் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.இது குறித்து ரயில்வே ஐ.ஜி., அம்ரேஷ் குமார் கூறுகையில், ''சம்பவ இடத்தில் இருந்த பொருட்கள், தடயவியல் சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன. முழு விசாரணைக்குப் பின் விபத்துக்கான காரணம் தெரியவரும்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்













புதிய வீடியோ