உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பெங்களூரில் ஜூன் 15, 16ல் தட்சிண பாரத் உற்சவம் - 2024

பெங்களூரில் ஜூன் 15, 16ல் தட்சிண பாரத் உற்சவம் - 2024

''கர்நாடகா, தமிழகம், புதுச்சேரி, கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, லட்சத்தீவு ஆகிய மாநிலங்களின் சுற்றுலாவை ஊக்குவிக்கும் வகையில் பெங்களூரில் ஜூன் 15, 16ம் தேதிகளில், 'தட்சிண பாரத் உற்சவம் - 2024' நடக்கிறது,'' என, கர்நாடக சுற்றுலா துறை இயக்குனர் ராம்பிரசாத் மனோகர் தெரிவித்தார்.

ரோடு ஷோ

எப்.கே.சி.சி.ஐ., எனும் கர்நாடக வர்த்தக மற்றும் தொழில் கூட்டமைப்பு மற்றும் கர்நாடக சுற்றுலா துறை இணைந்து 'தட்சிண பாரத் உற்சவம் - 2024' தொடர்பாக, நேற்று ஹைதராபாத்தில் 'ரோடு ஷோ' நடத்தப்பட்டது.அப்போது, சுற்றுலா துறை இயக்குனர் ராம்பிரசாத் மனோகர் பேசியதாவது:கர்நாடகா, தமிழகம், புதுச்சேரி, கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, லட்சத்தீவு ஆகியவற்றில் சுற்றுலாவை ஊக்குவிக்கும் வகையில் பெங்களூரில் ஜூன் 15, 16ம் தேதிகளில், 'தட்சிண பாரத் உற்சவம் - 2024' நடக்கிறது.இந்த உற்சவத்தில், ஏழு மாநிலங்களில் இருக்கும் கலை, கலாசாரம், பாரம்பியம், மருத்துவம், வனவிலங்குகள் தொடர்பான தகவல்கள் இடம் பெற்றிருக்கும். உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து வரும் சுற்றுலா பயணியருக்கு, கடலோர சுற்றுலா குறித்து அறிந்து கொள்ள உதவும்.இதன் முதல் படியாக, கர்நாடக சுற்றுலா துறையும், எப்.கே.சி.சி.ஐ.,யும் இணைந்து உற்சவத்தை ஏற்பாடு செய்துள்ளது.இவ்வாறு அவர் பேசினார்.

உணவு திருவிழா

எப்.கே.சி.சி., தலைவர் ரமேஷ் சந்திர லோஹட்டி பேசியதாவது:தென் மாநிலங்களின் சுற்றுலா மற்றும் வசதிகள் குறித்து அறிந்து கொள்ள, ஒரே குடையின் கீழ் வெளிப்படுத்த, இந்த உற்சவம் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.ஏழு தென்மாநிலங்கள் பங்கேற்கின்றன. இதற்காக கர்நாடகா சுற்றுலா துறை, ஒரு கோடி ரூபாய் வழங்கி உள்ளது. இதுபோன்று மற்ற மாநிலங்களிலும் உற்சவம் ஏற்பாடு செய்யப்படும்.தமிழகம், புதுச்சேரி உட்பட மற்ற தென் மாநிலங்களிலும் ரோடு ஷோ நடத்தப்படும். இதன் மூலம் முதலீட்டாளர்கள் ஈர்க்கப்படுவர். இதில், தென்னிந்திய உணவு திருவிழா, கட்டட கலை, கைவினை பொருட்கள் மற்றும் கைத்தறி மேளா ஆகியவை நடத்தப்படும்.இவ்வாறு அவர் பேசினார்.'ரோடு ஷோ'வில், எப்.கே.சி.சி.ஐ., துணைத்தலைவர் உமா ரெட்டி, சுற்றுலா கமிட்டி ஆலோசகர் சிவசண்முகம் உட்பட பலர் பங்கேற்றனர்.'தட்சிண பாரத் உற்சவம் - 2024' தொடர்பான அழைப்பிதழை, ஆந்திர மாநில சுற்றுலா துறை அதிகாரிகளுக்கு, கர்நாடக சுற்றுலா துறை இயக்குனர் ராம்பிரசாத் மனோகர், எப்.கே.சி.சி.ஐ., தலைவர் ரமேஷ் சந்திர லோஹட்டி ஆகியோர் வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ