மேலும் செய்திகள்
வரைபடத்தில் கூட பாகிஸ்தான் இருக்காது: ராணுவ தளபதி எச்சரிக்கை
1 hour(s) ago | 4
உலகளாவிய ஒத்துழைப்பு அவசியம்; நிர்மலா சீதாராமன் அழைப்பு
7 hour(s) ago
ஜடேஜா, ஜூரெல் சதம்; இந்திய அணி ரன் குவிப்பு
7 hour(s) ago
பெங்களூரு : 'அரசியல்வாதிகள் பரஸ்பரம் தரம் தாழ்ந்து வசைபாடுகின்றனர். இவர்களின் பேச்சும், செயலும் மக்களுக்கு தவறான செய்தியை, கொண்டு செல்லும்' என பா.ஜ., முன்னாள் அமைச்சர் சுரேஷ்குமார் தெரிவித்தார்.முகநுாலில் நேற்று அவர் கூறியிருப்பதாவது:கர்நாடகாவின், அனைத்து அரசியல் தலைவர்களிடம், நான் ஒரு வேண்டுகோளை வைக்கிறேன். அரசியல் தலைவர்கள், பொது இடங்களில் உரையாற்றும் போது, கட்டுப்பாடின்றி தரக்குறைவாக விமர்சிக்கின்றனர். பரஸ்பரம் ஏக வசனத்தில் பேசுகின்றனர்.அரசியல் தலைவர்களின் பேச்சும், செயலும் சமுதாயத்துக்கு, குறிப்பாக இளம் தலைமுறையினரிடம், தவறான தகவல் கொண்டு செல்லும். ஏக வசனத்தில் பேசுவதை, பொது இடங்களில் பரஸ்பரம் வசைபாடுவதை, மக்கள் உதாரணமாக எடுத்து கொண்டால் விபரீதங்கள் ஏற்படும்.எனவே, பொது மேடைகளில் அரசியல் தலைவர்கள் கண்ணியத்துடன் பேச வேண்டும். மற்ற கட்சியினரை ஏக வசனத்தில் பேசவும், திட்டவும் மேடைகளை பயன்படுத்த கூடாது. சட்டசபை மற்றும் மேல்சபை உறுப்பினர்களுக்கும், இது பொருந்தும்.நமக்கு தனிப்பட்ட முறையில் கோபம், வெறுப்பு இருந்தாலும், அதை வெளிப்படுத்துவதற்கு என, வரைமுறை உள்ளது. பொது வாழ்க்கையில் உள்ளவர்கள், மற்றவரை விமர்சிக்கும் போது, நல்ல வார்த்தைகளை பயன்படுத்துங்கள்.அரசியல் தலைவர்கள், உரையாற்றும் போது மற்ற கட்சியினரை வசைபாடாமல் பேசுவது குறித்து, கன்னட வளர்ச்சி ஆணையம் சிறப்பு பயிற்சி முகாம் நடத்தலாம்.இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
1 hour(s) ago | 4
7 hour(s) ago
7 hour(s) ago