உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சி.பி.எஸ்.இ., பள்ளி அனுமதிக்கான விதிமுறையில் அதிரடி திருத்தம்

சி.பி.எஸ்.இ., பள்ளி அனுமதிக்கான விதிமுறையில் அதிரடி திருத்தம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி : தனியார் சி.பி.எஸ்.இ., பள்ளிகளை துவங்குவதற்கான விதிகளில் திருத்தம் செய்துள்ள மத்திய அரசு, மாநில அரசின் தடையில்லா சான்று தேவையில்லை என தெரிவித்துள்ளது. நாடு முழுதும் சி.பி.எஸ்.இ., பள்ளிகள் மத்திய அரசு மற்றும் தனியார் சார்பில் நடத்தப்படுகின்றன. தனியார் நடத்தும் சி.பி.எஸ்.இ., பள்ளிகளுக்கு மத்திய அரசின் சி.பி.எஸ்.இ., எனப்படும் மத்திய இடைநிலை கற்றல் வாரியம் அனுமதி வழங்கி வருகிறது. இதன்படி, மாநிலங்களில் துவங்கப்படும் சி.பி.எஸ்.இ., பள்ளிகளுக்கு, சம்பந்தப்பட்ட மாநில அரசின் தடையில்லா சான்றிதழ் அவசியம். இந்நிலையில், இந்த விதியில் மத்திய அரசு திருத்தம் செய்துள்ளது. இது தொடர்பாக சி.பி.எஸ்.இ., செயலர் ஹிமான்ஷு குப்தா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:தனியார் நிறுவனங்கள் சி.பி.எஸ்.இ., பள்ளிகளை துவங்க மாநில அரசிடம் தடையில்லா சான்றிதழ் பெறுவது அவசியமாக இருந்தது. புதிய விதிகளின்படி, அதில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இனி அவ்வாறு தடையில்லா சான்றிதழ் பெற அவசியம் இல்லை.தனியார் நிறுவனங்கள் பள்ளி துவங்குவதற்கான அங்கீகாரம் கோரி மத்திய அரசிடம் நேரடியாக விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும் பள்ளிக்கு அங்கீகாரம் கொடுப்பதில் ஆட்சேபனை உள்ளதா என மாநில கல்வித் துறையிடம் மத்திய அரசு கருத்து கேட்கும். எந்தவித ஆட்சேபனையும் தெரிவிக்காத பட்சத்தில், விண்ணப்பிக்கும் பள்ளிக்கு அனுமதி வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

God yes Godyes
பிப் 25, 2025 09:01

கல்வி முழுமையும் மைய அரசே ஏற்கலாம்.


God yes Godyes
பிப் 25, 2025 08:49

இடத்தை குறிப்பிட ஆட்களை காட்டக்கூடாது.


God yes Godyes
பிப் 25, 2025 08:46

கால்டுவெல்லின் கண்டு பிடிப்பு கட்சிகளை பெறுக்கியது.


God yes Godyes
பிப் 25, 2025 08:44

திரவம் சூழ்ந்த இடங்களை வட மொழியில் திரவ இடம் என்றனர்.அந்த இடவாகு பெயரை ஆட்களுக்கு வைத்தார் பாவாடை கால்டுவெல்.


நாஞ்சில் நாடோடி
பிப் 22, 2025 10:48

மாநில அரசின் விஷப் பற்கள் படிப்படியாக பிடுங்கப்பட வேண்டும்


sivakumar Thappali Krishnamoorthy
பிப் 22, 2025 10:28

மதரசா போல ஹிந்து குழந்தைகளுக்கு ஹிந்து கலாச்சாரத்தை சொல்லி கொடுக்கும் ஹிந்து தர்மத்தை போதிக்கும் பள்ளிக்கூடங்கள் வேண்டும் .


Pandianpillai Pandi
பிப் 22, 2025 09:34

//விண்ணப்பிக்கும் பள்ளிக்கு அங்கீகாரம் கொடுப்பதில் ஆட்சேபனை உள்ளதா என மாநில கல்வித் துறையிடம் மத்திய அரசு கருத்து கேட்கும். எந்தவித ஆட்சேபனையும் தெரிவிக்காத பட்சத்தில், விண்ணப்பிக்கும் பள்ளிக்கு அனுமதி வழங்கப்படும்.// ஓரவஞ்சனைக்கு இது ஒரு எடுத்துக்காட்டு. இது ஒரு தேவையில்லாத ஆணி. நீங்க ஒரு ஆணியும் புடுங்கவேண்டாம். கூட்டாட்சி தத்துவத்திற்கு முரணாக செயல்பட்டுகொண்டிருக்கும் பா ஜ க விற்கு மக்கள் பாடம் புகட்ட தயாராகிவிட்டார்கள். தமிழ்நாட்டின் வரி மத்திய அரசுக்கு செல்லக்கூடாது. வரியில் தமிழ்நாட்டின் வளர்ச்கிக்கு எடுத்துக்கொண்டதுபோக மீதி பணத்தை மத்திய அரசுக்கு தர தமிழ்நாடு அரசு தீர்மானம் கொண்டுவரவேண்டும்.


V Venkatachalam
பிப் 22, 2025 10:41

முரசொலி படிக்கிறவன் தினகரனில் படங்கள் பார்க்கிறவன் எல்லாம் கருத்து எழுதுறேன் பேர்வழின்னு தினமலர் புனிதத்தை கெடுக்கிறான்கள்..ரூ 200 பண்ற வேலை இது..


ஆரூர் ரங்
பிப் 22, 2025 14:05

ஆந்திர மக்களின் எதிர்ப்பை மீறி மத்திய UPA(திமுக காங்கிரஸ் கூட்டணி) ஆட்சியில் தெலங்கானா பிரிக்கப்பட்டபோது கூட்டாட்சித் தத்துவம் எங்கே போனது? மமியார்உடைத்தால் மண் குடம்?


ManiK
பிப் 22, 2025 09:11

திமுக கும்பலின் அடுத்த போராட்டம் ரெடி. ஊழல் பண்ண வாய்பில்லாமல் இந்த மத்திய அரசு கதவுகளை அடைகிறதுன்னு...கூட்டாட்சி அது இதுனு புலம்பும். ஜால்ரா மீடியாக்கள் பக்கவாத்தியம் வாசிக்கும்.


தி. குமார், மதுரை
பிப் 22, 2025 06:42

மாநில அரசிடம் தடையில்லா சான்றிதழ் பெற சுமார் ஐம்பது முதல் எழுபது லட்சம். இந்தச் செலவு பள்ளிக் கட்டணம் என்ற பெயரல் மாணவர்களிடம் தான் வசூல் செய்யப்படுகிறது. இதற்கு ஆப்பு வைத்த மத்திய அரசுக்கு நன்றி.


Rajarajan
பிப் 22, 2025 06:03

அவ்ளோதான். இது trial தான். இனிமே தான் மெயின் picture இருக்கு. இரு அரசுகளுக்கும் மோதல் தொடரும். தமிழக அரசு ஒன்றை புரிந்துகொள்ள வேண்டும். தற்போதைய உலகளாவிய மாற்றத்தில், இன்னும் மொழி கொள்கை, மொழி போராட்டம் என்பதெல்லாம் வேலைக்காகாது. தி.மு.க. அரசின் வாரிசுகள் பயிலும் பள்ளிகளின் முன்பு, அவர்களை அரசின் சமச்சீர் கல்வியில் சேர்க்கச்சொல்லி, பா. ஜ. கா. போராட்டம் நடத்தினால், இவர்கள் நிலைமை என்ன ஆகும் ? அடுத்து அதுதான் நடக்க போகிறது, பொறுத்திருந்து பாருங்கள்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை