உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / உலகளாவிய பிரச்னைகளுக்கு உள்ளூர் அளவிலான தீர்வு தேவை

உலகளாவிய பிரச்னைகளுக்கு உள்ளூர் அளவிலான தீர்வு தேவை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: அனுசந்தன் தேசிய ஆராய்ச்சி அறக்கட்டளையின் முதல் நிர்வாகக் குழு கூட்டத்தில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி, ஆராய்ச்சிப் பணிகளில் உள்ள தடைகளை கண்டறிந்து நீக்கி, உலகளாவிய பிரச்னைகளுக்கு உள்ளூர் அளவிலான தீர்வு காண வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.நாடு முழுதும் உள்ள பல்கலைகள், கல்லுாரிகள், ஆராய்ச்சி நிறுவனங்கள் மற்றும் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு ஆய்வகங்களில் ஆய்வுப்பணிகள் மற்றும் கண்டுபிடிப்பு கலாசாரத்தை வளர்ப்பதற்காக அனுசந்தன் தேசிய ஆராய்ச்சி அறக்கட்டளையை மத்திய அரசு சமீபத்தில் நிறுவியது. தேசிய கல்விக் கொள்கையின் பரிந்துரைகளின்படி, நாட்டின் அறிவியல் ஆராய்ச்சிப் பணிகளுக்கான உயர்மட்ட ஆலோசனைகளை வழங்குவதற்கான உச்ச அமைப்பாக இது செயல்படுகிறது.தொழில்துறை, கல்வித்துறை மற்றும் அரசு துறைகள் மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களிடையே ஒத்துழைப்பை உருவாக்குகிறது. இந்த அனுசந்தன் தேசிய ஆராய்ச்சி அறக்கட்டளையின் முதல் நிர்வாகக் கூட்டம் டில்லியில் நேற்று நடந்தது. இதில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார்.

அந்த கூட்டத்தில் பிரதமர் பேசியது குறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கை:

அனுசந்தன் தேசிய ஆராய்ச்சி அறக்கட்டளை நிர்வாகக் குழுவின் முதல் கூட்டத்தின் வாயிலாக புதிய துவக்கம் ஏற்பட்டுள்ளதாக பிரதமர் தெரிவித்தார். ஆராய்ச்சி துறையில் உள்ள தடைகளை கண்டறிந்து நீக்க வேண்டிய அவசியத்தை அவர் வலியுறுத்தினார். பெரிய இலக்குகளை நிர்ணயித்தல், அவற்றை அடைவதில் கவனம் செலுத்துதல் மற்றும் புதிய ஆய்வுகளை மேற்கொள்வது குறித்தும் மோடி பேசினார். தற்போதுள்ள பிரச்னைகளுக்கு புதிய தீர்வுகளை காண ஆராய்ச்சிகளில் கவனம் செலுத்தவும், உலகளாவிய பிரச்னைகளுக்கு இந்திய தேவைகளுக்கு ஏற்ப உள்ளூர் அளவிலான தீர்வுகளை காணவும் வலியுறுத்தினார். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

Mario
செப் 11, 2024 18:53

இதெல்லாம் சரி,மணிப்பூர் எப்ப போறீங்க


அன்புகுமார்
செப் 11, 2024 09:54

உள்ளூர் பிரச்சனைக்கு எங்கே போய் முட்டிக்கிறது கோபால்?


Sampath Kumar
செப் 11, 2024 09:42

முதல உள்ளுறு மணிப்புரி pirachaniku ungal arsutheeru kanatum பார்க்கலாம் வெளிய ஓடுவதே குறிக்கோள் போல


Ms Mahadevan Mahadevan
செப் 11, 2024 09:17

திறமை ஜாஸ்தி


Ms Mahadevan Mahadevan
செப் 11, 2024 09:14

மன்னிப்புர் பிரசனையை தீர்க்க முடியல. உலகளாவிய பிரசனிக்கு போய்ட்டார்??????


spr
செப் 11, 2024 07:56

"உலகளாவிய பிரச்னைகளுக்கு இந்திய தேவைகளுக்கு ஏற்ப உள்ளூர் அளவிலான தீர்வுகளை காண்பது எப்படியென்று அறியாத போதுதான் பிரச்சினையே. உலகளாவிய பிரச்சினை என்னவென்பதே புரியாதவர்கள், எதிர்க்கட்சியினர் போல அனைத்துப் பிரச்சினைகளையும் உள்ளூர் அளவிலேயே தீர்வு காண முயற்சிப்பார்கள். பொருள் தரமாக இருந்தால், விலை அதிகமென்றாலும் எந்த நாட்டுப் பொருளானாலும் வாங்க விழைவது மனித இயல்பு வாங்க ஏற்ற பொருளை ஈட்ட எந்த வழியிலும் முயற்சிப்பதுவும் இயல்பே அதனால் லஞ்சம், கொலை கொள்ளை, பயங்கரவாதத்திற்கு உதவி நாட்டையே விற்பது போன்ற பல குற்றங்கள் அதிகரிக்கும் மாநில மாநில அரசுகள் தரமான விலை மலிவான பொருட்களை உற்பத்தி செய்ய உற்பத்தியாளர்களுக்கு உதவ வேண்டும் வேண்டியவருக்கு விருதுகள், ஆடம்பர விழாக்கள், சிலைகள் அமைத்தல் தேவையற்ற மானியங்கள் சலுகைகள் தருவதை விட வரிகளைக் குறைத்து ஆராய்ச்சி மூலம் உற்பத்தியை மேம்படுத்தல், உலகளாவிய ஏற்றுமதியை அதிகரித்தல் சந்தைப்படுத்துதல், சேமித்து வைக்க பொருட்களை ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு கொண்டுசெல்ல தரமான சாலைகள் அமைத்தல் போன்ற விஷயங்களில் அரசு உதவி செய்ய வேண்டும் வெற்றுப் பேச்சு உதவாது ஜி எஸ் டி வரியை அதிகரிக்கும் போது இதனால் கிடைக்கும் பணம் எப்படி மேற்குறிப்பிட்ட பணிகளுக்குச் செலவழிக்கப்படுகிறது என்று மக்களுக்கு அறிவிக்க வேண்டும் வெள்ளம் வந்த பின் இழப்பீடு தருவது பெரிதல்ல வருமுன் சேதத்தைத் தவிர்க்க வேண்டும்


சமீபத்திய செய்தி