உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அன்னபாக்யா திட்டத்தில் பணம் அரசு புதிய கட்டுப்பாடுகள் விதிப்பு

அன்னபாக்யா திட்டத்தில் பணம் அரசு புதிய கட்டுப்பாடுகள் விதிப்பு

பெங்களூரு: 'அன்னபாக்யா' திட்டத்தின் கீழ் பணம் பெற, புதிய கட்டுப்பாடுகளை அரசு விதித்துள்ளது.கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் அரசு நடக்கிறது.கடந்த ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலுக்கு முன்பு, காங்கிரஸ் அளித்த வாக்குறுதியில், 'நாங்கள் ஆட்சிக்கு வந்தால் அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும், அன்னபாக்யா திட்டத்தின் கீழ் மாதம் 10 கிலோ இலவச அரிசி வழங்கப்படும்' என்று அறிவிக்கப்பட்டிருந்தது.ஆனால், ஆட்சிக்கு வந்த பின்னர் அரசால் 10 கிலோ அரிசி கொடுக்க முடியவில்லை. இந்திய உணவு கழகம் அரிசி தர மறுத்ததாக அரசு கூறியது.இதனால், 5 கிலோ அரிசி, மீதம் 5 கிலோ அரிசிக்கு பணம் தருவதாக அரசு கூறியது. அதன்படி, 1 கிலோ அரிசிக்கு 34 ரூபாய் கணக்கு வைத்து, 5 கிலோ அரிசிக்கு 170 ரூபாய் பணம் வழங்கப்படுகிறது.ஒரு ரேஷன் அட்டையில் ஐந்து பேரின் பெயர்கள் இருந்தால், ரேஷன் அட்டையில் உள்ள குடும்ப தலைவர் வங்கி கணக்குக்கு, மாதம் 850 ரூபாய் பணம் செலுத்தப்படுகிறது.இந்நிலையில் கடந்த சில மாதங்களாக, பணம் சரியாக வங்கி கணக்கிற்கு செலுத்தப்படவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.இந்நிலையில், நிலுவையில் உள்ள தொகையை, இந்த மாதம் இறுதி அல்லது அடுத்த மாதம் முதல் வாரத்திற்குள் அனைவரின் வங்கி கணக்கிலும் செலுத்த வேண்டும் என அதிகாரிகளுக்கு, உணவு மற்றும் பொது விநியோக துறை அமைச்சர் முனியப்பா உத்தரவிட்டுஉள்ளார்.இந்நிலையில் அன்னபாக்யா திட்டத்தின் கீழ், ஐந்து கிலோ அரிசிக்கு பணம் பெறுவதற்கு அரசு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.அதாவது ஆதார் நம்பரை, ரேஷன் கார்டுடன் இணைக்க வேண்டும். ரேஷன் கார்டில் இருக்கும் குடும்ப தலைவரின் ஆதார் கார்டு, 10 ஆண்டுகளாக புதுப்பிக்கப்படாமல் இருந்தால், உடனடியாக ஆதார் கார்டை புதுப்பிக்க வேண்டும்.ஒவ்வொரு மாதமும் தவறாமல் ரேஷன் கடைகளுக்கு சென்று ஏதாவது பொருள் வாங்கி இருக்க வேண்டும். மேற்கண்டவைகளை செய்தால் தான், இனிமேல் குடும்ப தலைவர்கள் வங்கி கணக்கில் பணம் வரவு வைக்கப்படும் என, அரசு உத்தரவிட்டுஉள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை