உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / திருவள்ளுவர் சிலை திறப்பு; இன்று 15வது ஆண்டு விழா

திருவள்ளுவர் சிலை திறப்பு; இன்று 15வது ஆண்டு விழா

ஹலசூரு,: பெங்களூரு தமிழ் சங்கம் சார்பில், ஹலசூரு ஏரிக்கரையின் நீலகண்டன் சதுக்கத்தில், திருவள்ளுவர் சிலை நிறுவப்பட்டது. 18 ஆண்டுகளாக மூடப்பட்டிருந்த சிலையை, 2009 ஆகஸ்ட் 9ம் தேதி, அப்போதைய கர்நாடக முதல்வர் எடியூரப்பாவின் தீவிர முயற்சியால், அப்போதைய தமிழக முதல்வர் கருணாநிதி திறந்து வைத்தார்.இந்த நாளில், ஆண்டுதோறும் தமிழ் சங்கம் உட்பட பல்வேறு தமிழ் அமைப்புகள் திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துவர். திருக்குறள் முற்றோதல் நிகழ்ச்சியும் நடக்கும். அந்த வகையில், சிலை திறக்கப்பட்ட 15ம் ஆண்டு விழா, இன்று கொண்டாடப்படுகிறது.இது குறித்து, பெங்களூரு தமிழ் சங்க தலைவர் கோ.தாமோதரன் வெளியிட்ட அறிக்கையில், 'திருவள்ளுவர் சிலை திறந்த 15வது ஆண்டை ஒட்டி, இன்று காலை 9:30 மணிக்கு தமிழ் சங்க தலைவர், துணை தலைவர், செயலர், துண செயலர்கள், செயற்குழு உறுப்பினர்கள் உட்பட நிர்வாகிகள் திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து சிறப்பு செய்ய உள்ளனர். சங்கத்தின் அனைத்து உறுப்பினர்களும், பொதுமக்களும் பங்கேற்று விழாவை சிறப்பிக்க வேண்டுகிறோம்' என தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை