உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கர்நாடக மின் துறை அமைச்சர் கூட்டத்தில் அடிக்கடி மின் வெட்டு ஏற்பட்டதால் அதிர்ச்சி

கர்நாடக மின் துறை அமைச்சர் கூட்டத்தில் அடிக்கடி மின் வெட்டு ஏற்பட்டதால் அதிர்ச்சி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கோலார்: கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது.மாநில மின் துறை அமைச்சராக இருப்பவர் ஜார்ஜ். இவர், கோலார் மாவட்ட பஞ்சாயத்து அலுவலகத்தில், மின் வெட்டு உள்ளிட்ட மின்சார பிரச்னை தொடர்பாக, மக்கள் பிரதிநிதிகள், அதிகாரிகளுடன் நேற்று ஆலோசனை நடத்தினார்.கூட்டம் துவங்கிய சில நிமிடங்களிலேயே திடீரென மின் வெட்டு ஏற்பட்டது. மைக்கில் அதிகாரிகள் பேசியது யாருக்கும் கேட்கவில்லை. அரங்கமே இருண்டது. ஊழியர்கள் அவசரமாக சென்று சரி செய்தபின், மின் இணைப்பு கிடைத்தது. சிறிது நேரம் கழித்து, மின் துறை அமைச்சர் பேசியபோது, மீண்டும் மின் வெட்டு ஏற்பட்டது. அதிகாரிகள் முதல் ஊழியர்கள் வரை அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர்.சரி செய்து, மீண்டும் மின் இணைப்பு வழங்கப்பட்டது. சிறிது நேரம் கழித்து, மூன்றாவது முறையாகவும் மின் வெட்டு ஏற்பட்டது. இதனால், 'ஜெனரேட்டரும் செயல்படவில்லை.என்ன தான் நடக்கிறது இங்கு. வேண்டுமென்றே செய்கிறீர்களா' என்று அதிகாரிகளை அமைச்சர் கண்டித்தார்.பின், ஜார்ஜ் பேசுகையில், “மின் துறை அமைச்சர் நடத்திய கூட்டத்திலேயே அடிக்கடி மின் வெட்டு ஏற்பட்டது என்று ஊடகங்களில் செய்தி வெளிவரும். மின் தட்டுப்பாட்டால், இந்த பிரச்னை ஏற்படவில்லை.“வேறு பிரச்னையால், மின் வெட்டு ஏற்பட்டுள்ளது. இது குறித்து, அறிக்கை கேட்டுள்ளேன். நாங்கள் சமாளித்து கொள்கிறோம். ஊடகத்தினரும் சற்று சமாளித்து கொள்ளுங்கள்,” என்றார்.அமைச்சர் கிளம்பியதும், மின் துறை ஊழியர்களை, கோலார் மாவட்ட கலெக்டர் அக்ரம் பாஷா கடுமையாக கண்டித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Kasimani Baskaran
ஆக 31, 2024 07:35

சிறப்பான நிர்வாகம். பாவம் சர்வதேச மேப்பில் இருக்கும் பெங்களூரை தரைக்கு கொண்டுவராமல் இருக்க வேண்டும். இந்நேரம் காமராஜர் போன்ற மாநில நலனில் அக்கறையுள்ள நல்ல தலைவர்கள் நாலுபேர் தமிழகத்தில் இருந்தால் பாதித்தொழில்களை தமிழகத்துக்கு கொண்டு வந்து விடமுடியும். ஆனால் நமக்கு வாய்த்தது தத்திகளாக இருப்பதால் ஒன்றும் செய்ய முடியாது.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை