உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கால்பந்து போட்டிக்கு கே.எம்.எப்., ஸ்பான்சர்

கால்பந்து போட்டிக்கு கே.எம்.எப்., ஸ்பான்சர்

'ப்ரோ கபடி' போட்டியுடன், இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து விளையாட்டு போட்டிக்கான ஸ்பான்சர்ஷிப்பையும், கே.எம்.எப்., எனும் கர்நாடக பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் பெற்றுள்ளது.இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டிகள், இன்று துவங்குகிறது. இதில் 13 அணிகள் போட்டியிடுகின்றன. நாட்டின் கோல்கட்டா, டில்லி, கேரளா உட்பட முக்கிய நகரங்களில் நடக்க உள்ளது. இதன் ஸ்பான்சர்ஷிப்பை கே.எம்.எப்., பெற்றுள்ளது.சமீபத்தில் நடந்த 'டி 20' உலகக்கோப்பையில், ஸ்காட்லாந்து மற்றும் அயர்லாந்து கிரிக்கெட் அணிகளுக்கு, கே.எம்.எப்., ஸ்பான்சர் செய்திருந்தது. இதன் மூலம் சர்வதேச கிரிக்கெட் அணிகளுக்கு ஸ்பான்சர் செய்யும் நிறுவனம் என்ற பெருமை பெற்றுள்ளது.இது குறித்து, கே.எம்.எப்., நிர்வாக இயக்குனர் ஜெகதீஷ் கூறியதாவது:ப்ரோ கபடி போட்டிக்கு, கே.எம்.எப்., ஸ்பான்சர் பெற்றுள்ளது. அதே போன்று இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டிக்கான ஸ்பான்சரையும், கே.எம்.எப்., பெறுவதாக தகவல் வெளியாகி உள்ளது. நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இந்த இரண்டு போட்டிகளும் நடப்பதால், கே.எம்.எப்.,பின் 'நந்தினி' பிராண்ட் உற்பத்தி பொருட்களுக்கு, அதிகமான விளம்பரம் கிடைக்கும்.அந்தந்த மாநிலங்களில் நடக்கும், இரண்டு விளையாட்டு போட்டிகளிலும், எல்.இ.டி., போர்டு, டைட்டில், போஸ்டர்களில் நந்தினி பற்றிய விளம்பரங்கள் இடம் பெறும்.இவ்வாறு அவர் கூறினார் - நமது நிருபர் -.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை