மேலும் செய்திகள்
2028க்குள் ஏர் டாக்சி சேவை; தனியார் நிறுவனம் அறிவிப்பு
3 hour(s) ago | 2
ஆரியங்காவில் நாளை:(டிசம்பர்-24)
5 hour(s) ago
சபரிமலையில் நாளை(டிசம்பர்-24)
5 hour(s) ago
ஹுப்பள்ளி: ''முன்னாள் முதல்வர் குமாரசாமி நாக்கில் நரம்பு இல்லாததால் இஷ்டத்திற்கு பேசுகிறார்,'' என்று, காங்கிரஸ் எம்.எல்.ஏ., அப்பய்யா பிரசாத் கூறி உள்ளார்.ஹூப்பள்ளி - தார்வாட் மேற்கு காங்கிரஸ் எம்.எல்.ஏ., அப்பய்யா பிரசாத் அளித்த பேட்டி:பா.ஜ., - எம்.பி., அனந்த்குமார் ஹெக்டே போன்ற சிலர், அரசியல் அமைப்பு சட்டத்தை மாற்றுவது குறித்து பேசுகின்றனர். இது அம்பேத்கரை அவமதிக்கும் செயல். சமுதாயத்தில் ஒடுக்கப்பட்டோர், தலித், பிற்படுத்தப்பட்ட வகுப்பினரை காலில் போட்டு மிதிக்க, ஒரு சிலர் முயற்சி செய்கின்றனர்.கர்நாடக அரசின் வாக்குறுதி திட்டங்களுக்கு, மக்களிடம் வரவேற்பு உள்ளதை, முன்னாள் முதல்வர் குமாரசாமியால், பொறுத்து கொள்ள முடியவில்லை.வாக்குறுதி திட்டங்களால், பெண்கள் வழி தவறி செல்கின்றனர் என்று கூறி, பெண்களை கொச்சைப்படுத்தி உள்ளார். அவருக்கு நாக்கில் நரம்பு இல்லை. இதனால் இஷ்டத்திற்கு பேசுகிறார்.வாக்குறுதி திட்டங்களால் கர்நாடக அரசு திவாலாகிவிடும் என்று, பிரதமர் மோடி கூறினார். இப்போது எங்கள் வாக்குறுதிகளை நகல் எடுத்து, அதை வைத்து தேர்தல் அறிக்கை தயாரித்து உள்ளனர்.இவ்வாறு அவர் கூறினார்.
3 hour(s) ago | 2
5 hour(s) ago
5 hour(s) ago