உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / எல் அண்ட் டி பெண் ஊழியர்களுக்கு ஒரு நாள் மாதவிடாய் விடுமுறை

எல் அண்ட் டி பெண் ஊழியர்களுக்கு ஒரு நாள் மாதவிடாய் விடுமுறை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மும்பை: பிரபல நிறுவனமான எல் அண்ட் டியில் பணியாற்றும் பெண்களுக்கு ஒருநாள் மாதவிடாய் விடுமுறை வழங்கப்படும் என்று அந்நிறுவனத்தின் தலைவர் சுப்ரமணியன் அறிவித்துள்ளார். நாட்டின் முன்னணி தொழில் நிறுவனம் எல் அண்ட் டி, இன்ஜினியரிங், கட்டுமானம், தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் செயல்பட்டு வருகிறது.இந்நிறுவனத்தில் 5 ஆயிரம் பெண்கள் உள்பட மொத்தம் 60 ஆயிரம் ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில், மார்ச் 8ம் தேதி சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட உள்ள நிலையில், தனது நிறுவனத்தில் பணிபுரியும் பெண்களுக்கு மாதத்தில் ஒருநாள் மாதவிடாய் விடுமுறை அளிப்பதாக எல் அண்ட் டி நிறுவனத்தின் தலைவர் சுப்ரமணியன் அறிவித்துள்ளார். அண்மையில் உலகின் முன்னணி நாடாக நாம் வளர வேண்டுமெனில் வாரத்திற்கு 90 மணிநேரம் வேலை செய்ய வேண்டும் என்று சுப்ரமணியன் கூறியிருந்த நிலையில், இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த விடுமுறையானது முதற்கட்டமாக இன்ஜினியரிங் மற்றும் கட்டுமான துறைகளில் இருக்கும் பெண்களுக்கு பொருந்தும் என்றும், விரைவில் இது நடைமுறைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

Gopalan
மார் 07, 2025 18:50

குறைந்தது மூன்று நாள் கொடுத்தால் ந‌ல்லது. தமிழ் நாட்டு கவர்ன்மென்ட் லீவு விடுவாங்களா ?? அல்லது கிண்டல் செய்வார்களா??


Perumal Pillai
மார் 07, 2025 13:52

Now, everyone in the office knows that she is menstruating and avoid going near on any errand.


kulandai kannan
மார் 07, 2025 13:51

லீவ் முடிந்து அடுத்தநாள் வரும்போது ஆண் ஊழியர்களின் ஜாடைமாடை கிண்டலுக்கு ஆளாக நேரிடுமே.


Natarajan Ramanathan
மார் 07, 2025 12:22

இதெல்லாம் தேவை இல்லாத சலுகை. ஆண்களுக்கு மேலும் பணிச்சுமை அதிகரிக்கும்.


Kanns
மார் 07, 2025 11:29

Why Should Men Must Suffer??? Stop Pay& Perks of All Staff incl Ladies for All NonWorked Periods


RG GHM
மார் 07, 2025 11:27

They will extract the duration in other days. These types of leave is not necessary. Let them allow to take their CL that's enough.


अपावी
மார் 07, 2025 10:56

வாரத்துக்கு 90 மணி நேரம் உழைச்சா விடுமுறை தேவையெல்லாம் சீக்கிரம் போய்டும்.


Oru Indiyan
மார் 07, 2025 10:44

பெண்கள் வலி உணர்ந்து கொடுத்த விடுமுறை. வாழ்த்துக்கள்


Thanu Srinivasan
மார் 07, 2025 10:36

இப்படிபட்ட. விடுப்பெல்லாம் தேவைதானா நான் 1964 முதல் 2004 வரை அரசு ஊழியராக பணிபுரிந்துவந்தேன்.பெண் ஊழியர்களும் கணிசமான அளவில் பணிபுரிந்துவந்தனர். எவரும் இதுபோன்ற விடுப்பை கோரவில்லை தேவையற்றவிடுப்பு


Thanu Srinivasan
மார் 07, 2025 10:36

இப்படிபட்ட. விடுப்பெல்லாம் தேவைதானா நான் 1964 முதல் 2004 வரை அரசு ஊழியராக பணிபுரிந்துவந்தேன்.பெண் ஊழியர்களும் கணிசமான அளவில் பணிபுரிந்துவந்தனர். எவரும் இதுபோன்ற விடுப்பை கோரவில்லை தேவையற்றவிடுப்பு


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை