உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பால் கொள்முதல் விலை குறைத்தது காங்., அரசு

பால் கொள்முதல் விலை குறைத்தது காங்., அரசு

பெங்களூரு : விவசாயிகளிடம் இருந்து பால் கொள்முதல் விலையை காங்கிரஸ் அரசு லிட்டருக்கு 1.50 ரூபாய் குறைத்துள்ளது. விவசாயிகளுக்கு ஆதரவாக எதிர்க்கட்சியினர் கொதித்து எழுந்துள்ளனர்.கே.எம்.எப்., எனும் கர்நாடக பால் கூட்டமைப்பு சார்பில், விவசாயிகளிடம் இருந்து, ஒரு லிட்டர் பால், 30 ரூபாய் 50 பைசாவுக்கு கொள்முதல் செய்து வந்தது. இதனால், விவசாயிகளும் ஓரளவு பயனடைந்து வந்தனர்.தங்களிடம் கொள்முதல் செய்யும் பால் விலையை அதிகரிக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரி வந்தனர். ஆனால், நேற்று திடீரென லிட்டர் பால் மீது, 1.50 ரூபாய் கொள்முதல் விலை குறைக்கப்பட்டது. நேற்று விவசாயிகளிடம் இருந்து, பால் லிட்டருக்கு 29 ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்பட்டது.கூடுதல் விலை எதிர்பார்ப்பில் இருந்த விவசாயிகள், தற்போது பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.இதுகுறித்து, மத்திய கனரக தொழில் துறை அமைச்சர் குமாரசாமி, பெங்களூரில் நேற்று கூறியதாவது:அதிகாரம் என்ற மதம், உச்சிக்கு ஏறியுள்ள மாநில காங்கிரஸ் அரசு, விவசாயிகளுக்கு சுமையை ஏற்படுத்தி உள்ளது. விவசாயிகளின் வாழ்வாதாரமாக பால் திகழ்கிறது.இதன் கொள்முதல் விலை குறைத்திருப்பது, விவசாயிகளின் வயிற்றில் தீவைத்தது போல் உள்ளது.விவசாயிகளுக்கு ஆதரவான அரசு என்று கூறிகொள்ளும் முதல்வர், உடனடியாக தலையிட்டு தீர்வு காண வேண்டும். இந்த பிரச்னை தீர்க்கும் அளவுக்கு, முதல்வருக்கு நேரம் இருக்கும் என்று நினைக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.இதுபோன்று, மாநில பா.ஜ., தலைவர் விஜயேந்திராவும், காங்கிரஸ் அரசை கண்டித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ