மும்பை: இந்தியாவில் செயல்படும் மிகப் பெரிய போதைப்பொருள் நெட்வொர்க்கிற்கு, மூளையாக இயங்குவது, மும்பையை சேர்ந்த நவீன் சிக்கார் என்பது தெரிய வந்துள்ளது. பல நாடுகளில் வசிக்கும் அவரது கூட்டாளிகள் வாயிலாக, பல கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப் பொருளை, உலக நாடுகளில் அவர் விற்று வருகிறார். தற்போது தலைமறைவாக உள்ள அவரை, போலீசார் தேடுகின்றனர்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=tajxem0o&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0 படித்த நபர்கள்
போதைப் பொருள் மற்றும் போதை வஸ்துகளை விற்பதில், படிக்காதவர்களைக் காட்டிலும், நன்றாக படித்தவர்களே பெரும்பாலும் ஈடுபட்டு உள்ளனர். அதிலும், வெளிநாடுகளில் உள்ள பல்கலைகளில் படித்த பலரும், அந்த தொழிலில் இறங்கியுள்ளனர் என்ற அபாயகரமான தகவலை, மும்பை போதைப்பொருள் தடுப்பு போலீசார் கூறியுள்ளனர்.படித்த நபர்கள் வாயிலாக, பல கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருட்கள், உலகம் முழுதும் விற்கப்படுகின்றன என்பதை, மும்பை போதைப்பொருள் ஒழிப்பு படையினர் கண்டுபிடித்துள்ளனர்.அவர்களில் நவீன் சிக்கார் என்ற இளைஞர், மும்பை அருகே உள்ள நவிமும்பையை சேர்ந்தவர். போதைப்பொருள் விற்பனை நெட்வொர்க்கிற்கு மூளையாக செயல்படும் இவர், லண்டனில் கிரிமினல் சைக்காலஜி படித்துள்ளார். மேலும், சினிமா மற்றும் 'டிவி' தொடர்பான படிப்பையும் முடித்துள்ளார். தலைமறைவு வாழ்க்கை
தற்போது இவர், எந்த நாட்டில் இருக்கிறார் என தெரியாத வகையில், தலைமறைவு வாழ்க்கை நடத்தி வருகிறார். அதுபோல, இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள இருவரும், வெளிநாடுகளில் படித்தவர்கள் என்ற அதிர்ச்சி தகவலும் தெரிய வந்துள்ளது.பெரும்பாலும், அமெரிக்காவிலிருந்து வரும் விமானங்களில், வேறு பெயர்களில் அனுப்பி வைக்கப்படும் இந்த போதைப்பொருட்கள், மும்பை நகருக்குள் வினியோகிக்கப்படுகின்றன. அங்கிருந்து நாட்டின் பிற பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.இவர்களுக்குள் பண பரிமாற்றம் பெரும்பாலும், 'ஹவாலா' என்ற சட்ட விரோத முறையில் தான் நடத்தப்படுகிறது. 1,128 கோடி ரூபாய் அளவிற்கு, கடந்த இரண்டு ஆண்டு களில் இந்த கும்பல், போதைப் பொருட்களை விற்பனை செய்துள்ளது.இந்த கும்பலிடம் இருந்து, 11.540 கிலோ கோகைன், 4.9 கிலோ கஞ்சா, 5.5 கிலோ போதை சாக்லேட்டுகள், 1.60 லட்சம் ரூபாய் போன்றவற்றை, மும்பை போதைப் பொருள் ஒழிப்பு படை போலீசார் பறிமுதல் செய்து விசாரிக்கின்றனர்.