உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கோழி பண்ணையில் பரவும் மர்மநோய்

கோழி பண்ணையில் பரவும் மர்மநோய்

ஹைதராபாத்: தெலுங்கானாவில் கோழி பண்ணையில் பரவும் மர்ம நோயால், கடந்த மூன்று நாட்களில் மட்டும் 2,500 கோழிகள் இறந்துள்ளன. இதன் காரணமாக, அப்பகுதி மக்கள் அச்சமடைந்து உள்ளனர்.தெலுங்கானாவில் வனபர்த்தி மாவட்டத்தின் கொன்னுார் பகுதிகளில் ஏராளமான கோழி பண்ணைகள் உள்ளன. இப்பகுதியைச் சேர்ந்த சிவகேவுலு என்பவரின் பண்ணையில், 117 கோழிகள் சமீபத்தில் திடீரென இறந்தன. இந்த அதிர்ச்சி மறைவதற்குள் கடந்த 17ம் தேதி, 300 கோழிகள் இறந்தன.இதைத்தொடர்ந்து அடுத்த நாளான 18ம் தேதி கோழிப் பண்ணையில் சிவகேவுலு ஆய்வு செய்தபோது, மேலும் 2,083 கோழிகள் மர்மமான முறையில் இறந்து கிடந்தது கண்டறியப்பட்டது. தகவலறிந்து வந்த மாவட்ட கால்நடை துறை அதிகாரிகள், அக்கோழிப் பண்ணையில் ஆய்வு மேற்கொண்டதுடன், இறந்த கோழிகளின் ரத்த மாதிரிகளையும் சேகரித்து ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர். மர்ம நோய் தாக்கியதால், கோழிகள் இறந்திருக்கலாம் என கூறப்படுகிறது. முன்னதாக, ஆந்திராவின் மூன்று மாவட்டங்களில் உள்ள ஐந்து கோழிப் பண்ணைகளில் கடந்த வாரம் பறவை காய்ச்சல் பரவியதில், 1 லட்சம் கோழிகள் அழிக்கப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ