தேசியம்
ராகுல் தோற்று விட்டார்! இளம் தலைமுறையினரின் ஆதரவை பெற்று விடலாம் என, காங்கிரசைச் சேர்ந்த லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் கணக்கு போட்டார். அதிலும் தோற்று விட்டார். இளம் தலைமுறையினர் உட்பட அனைத்து தரப்பினரும் விரும்பும் தலைவராக பிரதமர் மோடி உள்ளார். அவருக்குள்ள செல்வாக்கை பார்த்து ராகுல் அஞ்சுகிறார். பீயூஷ் கோயல் மத்திய அமைச்சர், பா.ஜ.,மூடி மறைக்க முயற்சி! அயோத்தி ராமர் கோவில் நன்கொடை முறைகேடு குறித்து, உச்ச நீதிமன்றத்தின் கண்காணிப்பின் கீழ் சிறப்பு புலனாய்வு குழு விசாரிக்க வேண்டும். இந்த முறைகேட்டை மூடி மறைக்க அனைத்து முயற்சிகளையும் ஆளும் பா.ஜ., எடுத்து வருகிறது. கோடிக்கணக்கான பக்தர்களுக்கு பா.ஜ., அரசு பதில் சொல்லியே ஆக வேண்டும். பிரமோத் திவாரி ராஜ்யசபா எம்.பி., – காங்கிரஸ்மன்னிப்பு கேட்க வேண்டும்! பார்லி., வளாகத்தில் ஹிந்து மதத்தை கேலி செய்யும் வகையில், காங்., – எம்.பி., ராகுலும், அவரது கட்சி எம்.பி.,க்களும் வீதி நாடகம் நடத்தியது மிகவும் கண்டிக்கத்தக்கது. ஹிந்துக்களை இழிவுபடுத்துவதை ஒருபோதும் ஏற்க முடியாது. இதற்கு நாட்டு மக்களிடம் ராகுல் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும். சி.ஆர்.கேசவன் செய்தித் தொடர்பாளர், பா.ஜ.,