உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / என்னை யாராலும் நீக்க முடியாது: முதல்வராக நீடிப்பேன்

என்னை யாராலும் நீக்க முடியாது: முதல்வராக நீடிப்பேன்

பெங்களூரு : என்னை முதல்வர் பதவியிலிருந்து யாராலும் நீக்க முடியாது என கர்நாடகா காங்.,முதல்வர் சித்தராமையா அதிரடியாக தெரிவித்துள்ளார்.கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி முதல்வராக சித்தராமையா தன் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி, மனைவி பார்வதிக்கு 14 வீட்டுமனைகள் வாங்கிக் கொடுத்ததாக சமூக ஆர்வலர் ஆபிரகாம் என்பவர், கவர்னர் தாவர் சந்த் கெலாட்டிடம் புகார் செய்தார். புகாரின் மீது வழக்கு தொடர கவர்னர் அனுமதி அளித்தார்.பதவி விலக வேண்டும் என எதிர்க்கட்சிகள் தொடர்ந்து நெருக்கடி அளித்து வந்த நிலையில் ராஜினாமா செய்யமாட்டேன் என சித்தராமையா கூறி வருகிறார்.நாளுக்கு நாள் நெருக்கடி முற்றிய நிலையில் அடுத்த முதல்வராக யாரை நியமிக்கலாம் என காங்கிரஸ் மேலிடம் பொதுச்செயலர் வேணுகோபால், லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல், கர்நாடகாவுக்கான காங்கிரஸ் பொறுப்பாளர் ரன்தீப் சுர்ஜேவாலா ஆகியோர், ஆலோசனை நடத்தியுள்ளனர்.இந்நிலையில் இன்று பெலக்காவி மாவட்டத்தில் நடைபெற்ற கட்சிநிர்வாகிகள் மற்றும் தியாகிகள் கவுரவிப்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற முதல்வர் சித்தராமையா கூறியது,நிலம் ஒதுக்கிய விவகாரத்தில் எந்த தவறும் நடக்கவில்லை. என்னை யாராலும் பதவிலிருந்து நீக்க முடியாது, மக்களின் ஆசீர் வாதமும் உள்ளது. மக்களின் ஆதரவு இருக்கும் வரை நானே முதல்வராக நீடிப்பேன். பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த ஒருவர் முதல்வராக இருக்க கூடாது என்பதே பா.ஜ.வின் நோக்கமாக உள்ளாது. இதனால் தான் எனக்கு எதிராக சதி செய்கிறது. அமைச்சரவையில் மாற்றம் குறித்து மேலிடம் முடிவு செய்யும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

Nandakumar Naidu.
ஆக 27, 2024 11:47

பதவி வெறி மற்றும் மத வெறி இந்த இரண்டும் யாரையும் விடாது.


Amruta Putran
ஆக 26, 2024 23:40

Oh then so called pseudo Brahmin Rahul Gandhi trying to remove OBC Modi from PM post, isn't it?


சமூக நல விரும்பி
ஆக 26, 2024 22:51

நீதி மன்றத்தின் தீர்ப்பே இறுதியானது என்று கூறுகிறார்கள். ஆனால் அப்படி யாரும் மதிப்பதாக தெரியவில்லை


Dr Govind Thurai
ஆக 26, 2024 22:22

என்ன செய்ய... நாட்டின் நிலைமை... ஏழைகள் பாவம்


SP
ஆக 26, 2024 21:50

குற்றம் சாட்டபடுபவர்கள் அனைவருமே ஜாதியை சொல்லி அதனால்தான் என்பதுபோல் சொல்வது வாடிக்கையாகிவிட்டது நீதிமன்றங்கள் எதற்கு இருக்கிறது?


..
ஆக 26, 2024 21:36

பதவிவெறி


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை