உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / 18 கிலோ பிளாஸ்டிக் அதிகாரிகள் பறிமுதல்

18 கிலோ பிளாஸ்டிக் அதிகாரிகள் பறிமுதல்

தங்கவயல்: ராபர்ட் சன் பேட்டை எம்.ஜி., மார்க்கெட்டில் 18 கிலோ பிளாஸ்டிக் பொருட்களை நகராட்சி ஆணையர் பவன் குமார் நேற்று பறிமுதல் செய்தார்.பிளாஸ்டிக்குகளை பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து நகராட்சி அதிகாரிகள் பல முறை விழிப்புணர்வு பிரசாரம் செய்தனர். ஆயினும், தொடர்ந்து பிளாஸ்டிக் பயன்பாடு உள்ளது.ராபர்ட் சன் பேட்டை எம்.ஜி., மார்க்கெட் பகுதியில் நகராட்சி ஆணையர் பவன் குமார், சுகாதாரத்துறை அதிகாரி மங்களகவுரி உட்பட ஊழியர்கள் நேற்று சோதனையில் ஈடுபட்டனர். பயன்படுத்துவதற்காக வைக்கப்பட்டிருந்த 18 கிலோ பிளாஸ்டிக் பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.தொடர்ந்து ஹோட்டல்களில் இட்லி அவிக்க பிளாஸ்டிக் பயன்படுத்த கூடாது என்றும், திறந்தவெளியில் இறைச்சி விற்பனை செய்ய கூடாது என்றும் அறிவுறுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை