உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சித்ரதுர்கா, பெங்களூரில் 23ல் பிரியங்கா பிரசாரம்

சித்ரதுர்கா, பெங்களூரில் 23ல் பிரியங்கா பிரசாரம்

பெங்களூரு: லோக்சபா தேர்தலில், காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய, காங்கிரஸ் தேசிய பொது செயலர் பிரியங்கா வரும் 23ல் கர்நாடகா வருகிறார்.காங்., எம்,பி., ராகுல், ஏற்கனவே கர்நாடகாவுக்கு வந்து பிரசாரம் செய்துள்ளார். கட்சியின் தேசிய பொது செயலர் பிரியங்கா, வரும் 23ல் மாநிலத்துக்கு வருகை தருகிறார். சித்ரதுர்கா, பெங்களூரு தெற்கு லோக்சபா தொகுதிகளில், காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரசாரம் செய்கிறார்.சித்ரதுர்காவின், பழைய நடுநிலைப் பள்ளி மைதானத்தில் நடக்கும் பொதுக் கூட்டத்தில், பிரியங்கா, கட்சி வேட்பாளர் சந்திரப்பாவுக்காக ஓட்டு கேட்பார்.பின், பெங்களூரு ஹெச்.எஸ்.ஆர்., லே - அவுட்டில் உள்ள அடல் பிஹாரி வாஜ்பாய் விளையாட்டு மைதானத்தில் நடக்கும் பொதுக் கூட்டத்தில் பங்கேற்று, பெங்களூரு தெற்கு காங்., வேட்பாளர் சவுமியா ரெட்டிக்கு ஆதரவாக பிரசாரம் செய்கிறார்.காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, வரும் 22ல் பெங்களூரு ரூரல், சிக்கபல்லாபூர் தொகுதிகளிலும், சென்னபட்டணாவின் ஹவுசிங் போர்டு காலனியில் நடக்கும் நிகழ்ச்சியிலும் பங்கேற்கிறார்.மற்றொரு பக்கம் முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் சிவகுமாரும், பிரசாரத்தில் ஈடுபடுகின்றனர். இன்று கோலார் லோக்சபா தொகுதிக்கு உட்பட்ட பங்கார்பேட்டை, சித்லகட்டா மற்றும் பெங்களூரு ரூரல், பெங்களூரு தெற்கு தொகுதிகளில் நடக்கும் பொதுக் கூட்டங்களில் பங்கேற்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

V RAMASWAMY
ஏப் 21, 2024 09:25

இதத்திற்குத்தக்க வேஷம், சில இடங்களில் கிரிஸ்துவர் மாதிரி, சில இடங்களில் ஹிந்துவாக, சில இடங்களில் முஸ்லீம் ஆக அடையாளம் கண்டுகொள்ளுங்கள் பச்சோந்திகளை


மேலும் செய்திகள்













முக்கிய வீடியோ