உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / குழந்தை திருமண தடை சட்டம் அனைத்து மதத்துக்கும் பொருந்தும்: கேரள ஐகோர்ட் அதிரடி உத்தரவு

குழந்தை திருமண தடை சட்டம் அனைத்து மதத்துக்கும் பொருந்தும்: கேரள ஐகோர்ட் அதிரடி உத்தரவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கொச்சி: 'குழந்தை திருமண தடை சட்டம், மத வேறுபாடின்றி அனைத்து இந்திய குடிமக்களுக்கும் பொருந்தும்' என, கேரள உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.கேரளாவின் பாலக்காட்டில் வசிக்கும் முஸ்லிம் மதத்தைச் சேர்ந்த சிறுமிக்கு, 2012 டிச., 30ல் திருமணம் நடந்தது. இது தொடர்பாக, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் வடக்கன்சேரி போலீசில் புகார் அளித்தார்.கேரள உயர் நீதிமன்றத்தில் நடந்த விசாரணையின் போது, 'பெண் பூப்பெய்திய உடன் அவருக்கு திருமணம் செய்து வைக்க முஸ்லிம் சட்டம் இடம் அளிக்கிறது' என, சிறுமியின் தந்தை தரப்பில் வாதிடப்பட்டது.வழக்கு விசாரணை முடிவுக்கு வந்ததை அடுத்து, நீதிபதி குன்னிகிருஷ்ணன் தீர்ப்பளித்தார். அதன் விபரம்:குழந்தை திருமணங்கள் குழந்தைகளின் அடிப்படை மனித உரிமையை பறிக்கின்றன. கல்வி மறுக்கப்படுகிறது. இளம் வயதில் கர்ப்பம் அடைவதால் உடல்நலக் கோளாறுகள் ஏற்படுகின்றன. பேறுகால மரணங்கள் நடக்கின்றன. பாலியல் ரீதியிலான தொற்றுகளுக்கு பெண் குழந்தைகள் ஆளாகின்றனர்.குழந்தை திருமணங்கள் பெண் குழந்தைகளை உணர்வுப்பூர்வமாகவும், மனதளவிலும் சிதைக்கின்றன. சமூக ரீதியாக அவர்கள் தனிமைப்படுத்தப்படுகின்றனர். மேலும், குழந்தை திருமணம் என்பது சர்வதேச மனித உரிமைகள் சட்டம் மற்றும் மரபுகளையும் மீறுவதாகும்.குழந்தை திருமண தடுப்புச் சட்டம் இயற்றப்பட்டு பல ஆண்டுகள் ஆகியும், கேரளாவில் தொடர்வது வேதனை அளிக்கிறது.மதங்களை கடந்து ஒருவர் இந்நாட்டு குடிமகன் என்பதே முதன்மையானது. அதன் பின் தான் அவர் சார்ந்த மதத்தின் உறுப்பினர் என்ற அந்தஸ்தை அடைகிறார். எனவே, குழந்தை திருமண தடுப்புச் சட்டம் - 2006, இந்நாட்டு குடிமக்கள் அனைவருக்கும் பொருந்தும்.இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

ஆரூர் ரங்
ஜூலை 29, 2024 10:59

குறிபிட்ட வயதுக்குப் பிறகு உடனே திருமணம் செய்து கொள்ளத்தான் வேண்டும் என கூறவில்லை. அது உரிமையோ கடமையோ அல்ல. ஆலோசனை மட்டுமே. குழந்தைத் திருமணங்கள் பெண்களின் கல்விக்கு பெரிய தடை .நாட்டின் சட்டங்களுக்கு பிறகே மதச் சட்டங்கள்.


தத்வமசி
ஜூலை 29, 2024 10:22

இரண்டு மூன்று நாட்களுக்கு முன்பு ஒரு தீர்ப்பில் பதினைந்து வயது நிரம்பிய கர்ப்பிணி பெண் அந்த குழந்தையை பெற்றெடுத்துக் கொள்வதா அல்லது கலைப்பதா என்பதைக் கூற நீதிமன்றத்திற்கு முப்பத்திரண்டு வாரங்கள் பிடித்தன. எட்டுமாத கர்பத்தை அதுவும் பதினைந்து வயது குழந்தை கலைத்தால் என்ன நடக்கும்? இதை சொல்ல எவ்வளவு நாட்கள் மாதங்கள் எடுத்துக் கொள்ளும் நீதி மன்றம். இந்த குழந்தை திருமண சட்டத்தை நடைமுறை படுத்த எத்தனை வருடங்கள் இன்னும் நீடிக்கும் ? இந்த தீர்ப்பு மேல் கோர்ட்டுக்குச் செல்லும். அவர்கள் எடுத்துக் கொள்ளலாமா வேண்டாமா என்பதைக் கூறவே எத்தனை மாதங்கள் ஆகும் என்று தெரியாது. பிறகு வழக்கு எண் வந்து ஆய்ந்து பிறகு மாநில மத்திய அரசுகளை கேள்வி கேட்டு அவகாசம் கொடுத்து பிறகு விசாரணை நடந்து சுமாராக ஒரு ஏழு அல்லது எட்டு வருடங்களாவது ஆகலாம். அதன் பிறகு அதற்க்கு மேல் கோர்ட்டு. ஆக தாமதிக்கப்படும் தீர்ப்பு தேவையே இல்லாத தீர்ப்பு. அதுவும் ஒரு தண்டனையே. ஒரு தலைமுறையாக பெண்கள் வஞ்சிக்கபடுவார்கள். அதற்கு யார் பொறுப்பு ?


A
ஜூலை 29, 2024 10:14

hahaha ? ? ?..


GMM
ஜூலை 29, 2024 09:19

குழந்தை திருமண சட்டம் அனைத்து குடிமக்களுக்கும் பொருந்தும் என்று நீதிமன்றம் கூற பாதி நூற்றாண்டு சென்றுவிட்டது. இது இறுதி அல்ல. உச்ச நீதிமன்றம் தன் அதிகாரம் செயல்படுத்தும். காங்கிரஸ் வகுத்த எந்த சட்டமும் தெளிவாக இருக்காது. இதனை பின் பற்றி தேசிய பிஜேபி இந்தியாவை வளர்ந்த நாடக ஆக்குவது கடினம். சட்ட அமைப்பை சீர் செய்ய வேண்டும்.


subramanian
ஜூலை 29, 2024 06:20

குழந்தைகளை கூட விட்டு வைக்க வில்லை


subramanian
ஜூலை 29, 2024 06:16

பெண்களை இழிவுபடுத்தும் விதமாக நடந்து கொள்ளலாம்?


subramanian
ஜூலை 29, 2024 06:14

காலத்திற்கு பொருந்தாத, குழந்தை திருமணம் , மற்ற மதத்தினரை தாழ்த்தப்பட்ட மக்கள் என்று சொல்வது, என் மதமே உயர்வு என்று மற்றவர்களைக் கொலை செய்வது. தலாக், பல தார மணம், பர்கா, பசு வதை- இவற்றை விட வேண்டும்.


மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ