உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / எஸ்.சி., - எஸ்.டி., ஜாதி சான்றிதழ் பெறுவதற்கு தங்கவயலில் குவிந்தனர் ரேஷன் கார்டுதாரர்கள்

எஸ்.சி., - எஸ்.டி., ஜாதி சான்றிதழ் பெறுவதற்கு தங்கவயலில் குவிந்தனர் ரேஷன் கார்டுதாரர்கள்

தங்கவயல்: ரேஷன் பொருட்கள் சலுகைக்காக எஸ்.சி., - எஸ்.டி., ஜாதி சான்றிதழ் பெறுவதற்காக தங்கவயல் தாலுகா அலுவலகம் உள்ள மினி விதான் சவுதாவில் தினமும் கூட்டம் காணப்படுகிறது.தங்கவயல் நகரில், மிகவும் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்காக அந்த்யோதயா 896, வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கான பி.பி.எல்., 22,584, வறுமைக்கோட்டிற்கு மேல் உள்ளவர்களுக்கான ஏ.பி.எல்., 1015 என மொத்தம் 24,495 ரேஷன் கார்டுகள் உள்ளன.கிராமப்பகுதியில், அந்த்யோதயா 3,247, பி.பி.எல்., 23,590, ஏ.பி.எல்., 767 என மொத்தம் 27,604 ரேஷன் கார்டுகள் உள்ளன.தங்கவயல் தாலுகாவில் மொத்தம் 52,099 ரேஷன் கார்டுகள் உள்ளன. புதிய ரேஷன் கார்டு கோரி 1,000க்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர்.வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ள எஸ்.சி., - எஸ்.டி., வகுப்பினரின் ரேஷன் கார்டுகளுக்கு இலவச அரிசி, அரிசிக்கான தொகையை அரசு வழங்கி வருகிறது.எஸ்.சி., - எஸ்.டி., ஜாதி பிரிவினர் எவ்வளவு பேர் உள்ளனர். இச்சலுகைகளை பிற சமுதாயத்தினரும் பெறுகின்றனரா என்பதை கண்டுபிடிக்க, ரேஷன் கார்டு ஜெராக்ஸ் பிரதியுடன், எஸ்.சி., - எஸ்.டி., ஜாதி சான்றிதழையும் இணைத்து, ரேஷன் டிப்போவில் கட்டாயம் கொடுக்க வேண்டும். அவ்வாறு கொடுக்க தவறினால், அத்தகையோர் மீது அரசு நடவடிக்கை எடுக்கும் என்று கூறப்பட்டது.இதனால், ஜாதி சான்றிதழ் பெறுவதற்காக, தங்கவயல் தாலுகா அலுவலகம் உள்ள மினி விதான் சவுதா முன் ரேஷன் கார்டு தாரர்கள் கூட்டம், கடந்த சில நாட்களாக அதிகரித்துள்ளது. ரேஷன்கார்டு தாரர்களிடம் விண்ணப்பம் பெறுகின்றனர். அதற்கான அத்தாட்சி ஏதும் கொடுக்கப்படவில்லை. இரண்டு, மூன்று நாட்கள் கழித்து வருமாறு ஊழியர்கள் கூறுகின்றனர்.டிப்போ மீது நடவடிக்கைரேஷன் கார்டுடன் ஜாதி சான்றிதழ் சேர்க்க வேண்டும் என்று அரசு உத்தரவு உள்ளது. ஆனால், சான்றிதழ் ஒப்படைக்காதவர்களுக்கு வழங்க கூடாதென்று எந்த உத்தரவும் இல்லை. வழக்கம் போல பெறலாம். பொருட்கள் வழங்க மறுப்பவர்கள் மீது புகார் கொடுத்தால், விசாரித்து டிப்போ உரிமை ரத்து செய்யப்படும்.மல்லிகார்ஜுன், உதவி இயக்குனர்,உணவுத் துறை, கோலார் மாவட்டம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை