உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / காயப்படுத்தியிருந்தால் மன்னித்து விடுங்கள் ஓய்வு பெற்ற தலைமை நீதிபதி உருக்கம்

காயப்படுத்தியிருந்தால் மன்னித்து விடுங்கள் ஓய்வு பெற்ற தலைமை நீதிபதி உருக்கம்

புதுடில்லி: ''என் பணிக்காலத்தில் உங்களை காயப்படுத்தி இருந்தால் என்னை மன்னித்து விடுங்கள்,'' என, பணியின் கடைசி நாளான நேற்று, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் உருக்கமாக பேசினார்.உச்ச நீதிமன்றத்தின், 50வது தலைமை நீதிபதியாக, 2022, நவ., 9ம் தேதி டி.ஒய்.சந்திரசூட் பொறுப்பேற்றார். இவரது பதவிக்காலம் நாளையுடன் முடிவுக்கு வருகிறது. அடுத்த தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கன்னா நியமிக்கப்பட்டுள்ளார். இவர், நாளை மறுநாள் பதவி ஏற்க உள்ளார். இன்றும், நாளையும் நீதிமன்றம் விடுமுறை என்பதால், சந்திரசூட் நேற்றுடன் பணியில் இருந்து ஓய்வு பெற்றார். அவருக்கான பிரிவு உபசார விழா உச்ச நீதிமன்றத்தில் நேற்று நடந்தது. அப்போது சந்திரசூட் பேசியதாவது:நாளை முதல் நான் நீதி வழங்க முடியாது; ஆனாலும், என் பணியை முழு நிறைவுடன் செய்து முடித்த திருப்தியில் உள்ளேன்.நீதிபதிகளின் பணி, புனித யாத்திரீகர்களுக்கு சமமானது. தினசரி, சேவையாற்ற வேண்டும் என்ற உறுதியுடன் தான் நீதிமன்றம் வருகிறோம்.நாங்கள் செய்யும் பணி ஒரு வழக்கை உருவாக்கும் அல்லது உடைக்கும். என் பணிக்காலத்தின் போது, நீதிமன்றத்தில் நான் யாரையாவது காயப்படுத்தி இருந்தால் என்னை மன்னித்துவிடுங்கள். நீதிபதிகளில், அதிக கேலி கிண்டல்களுக்கு ஆளானது நானாக தான் இருப்பேன். என்னை கேலி செய்தவர்களுக்கு திங்கள் கிழமையில் இருந்து வேலை இருக்காது.இந்த நேரத்தில் ஒன்றை கூறிக் கொள்ள விரும்புகிறேன். எதிர்ப்பு தான் ஒருவரை சிறந்த மனிதராக உருவாக்கும். எனவே, என் எதிரிகளை நான் மதிக்கிறேன்.இவ்வாறு அவர் பேசினார். தலைமை நீதிபதி சந்திரசூட் அளித்த முக்கிய தீர்ப்புகள்: லோக்சபா தேர்தலுக்கு முன், மத்திய பா.ஜ., அரசால் கொண்டு வரப்பட்ட தேர்தல் பத்திரங்கள் திட்டம் ரத்து ஜம்மு - -காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய சட்டப்பிரிவு - 370ஐ நீக்கியதை உறுதி செய்து உத்தரவுஒரே பாலின திருமணத்திற்கு சட்ட அங்கீகாரம் வழங்க மறுப்பு.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை