உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கவுன்சிலர் கொலையில் ரவுடி சுட்டு பிடிப்பு

கவுன்சிலர் கொலையில் ரவுடி சுட்டு பிடிப்பு

ஆனேக்கல்,: காங்கிரஸ் நகராட்சி கவுன்சிலரை கொலை செய்த வழக்கில், தலைமறைவாக இருந்த ரவுடி துப்பாக்கியால் சுட்டு பிடிக்கப்பட்டார்.பெங்களூரு ரூரல், ஆனேக்கல் நகராட்சி காங்கிரஸ் கவுன்சிலர் ரவி, 40. இவரது வீடு ஆனேக்கல் அருகே பத்ரிபுரா கிராமத்தில் உள்ளது. கடந்த 24ம் தேதி இரவு, அலுவலகத்தில் இருந்து வெளியே வந்த ரவியை, மூன்று பேர் கும்பல் இரும்பு ராடு உள்ளிட்ட ஆயுதங்களால் அடித்து கொலை செய்தது.முன்விரோதத்தில் ரவி கொலை செய்யப்பட்டது தெரிந்தது. ரவுடிகளான கார்த்திக், ஹரிஷ், வினய் ஆகியோரை போலீசார் தேடினர். ஹரிஷ், வினய் நீதிமன்றத்தில் சரண் அடைந்தனர். தலைமறைவாக இருந்த கார்த்திகை போலீசார் தேடி வந்தனர்.இந்நிலையில், ஆனேக்கல் அருகே மைசூரமநோட்டி கிராமத்தில், கார்த்திக் பதுங்கி இருப்பது பற்றி, ஆனேக்கல் இன்ஸ்பெக்டர் திப்பே சாமிக்கு நேற்று காலை தகவல் கிடைத்தது.கார்த்திக்கை கைது செய்ய திப்பேசாமி தலைமையில் போலீசார் சென்றனர். கிராமத்தின் ஒதுக்குபுறமான பகுதியில் கார்த்திக் சுற்றி திரிந்தார்.அவரை போலீசார் சுற்றி வளைத்தபோது, ஸ்கூட்டரில் ஏறி தப்பிக்க முயன்றார். நிலைதடுமாறி, ஸ்கூட்டரில் இருந்து தவறி விழுந்தார். அவரை பிடிக்க போலீஸ்காரர் சுரேஷ் சென்றார். அப்போது, ஸ்கூட்டரில் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சுரேஷை, கார்த்திக் தாக்கிவிட்டு தப்பினார்.அதிர்ச்சியடைந்த இன்ஸ்பெக்டர் திப்பேசாமி துப்பாக்கியால் ஒரு ரவுண்டு வானத்தை நோக்கி சுட்டு சரணடையும்படி எச்சரித்தார். ஆனால் கார்த்திக் கேட்கவில்லை. இதனால், அவரது வலது காலில், திப்பேசாமி துப்பாக்கியால் சுட்டார். சுருண்டு விழுந்த கார்த்திக் கைது செய்யப்பட்டார். தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார்.சுட்டுப் பிடிக்கப்பட்ட கார்த்திக்கின் புகைப்படத்தை அப்லோட் செய்துள்ளேன் சார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ