பொதுநலன் மனுவுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம்
இந்தியா கேட்:அஜ்மீரி கேட் பகுதியில் சட்டவிரோத மற்றும் அங்கீகரிக்கப்படாத கட்டுமானங்களை அகற்ற உத்தரவிடக்கோரி, டில்லி உயர் நீதிமன்றத்தில் பொதுநலன் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது.மனுவை தலைமை நீதிபதி டி.கே. உபாத்யாயா, நீதிபதி துஷார் ராவ் கெடேலா ஆகியோர் அடங்கி அமர்வு விசாரித்து, 'மனுதாரரின் கோரிக்கையில் பொதுநலன் இல்லை. சில மறைமுகமான நோக்கம் இருப்பதாக தெரிகிறது. உண்மையான பொதுநலன் மனுக்களை விசாரிக்கும் நீதிமன்றத்தின் முயற்சியை தடுப்பதாக இருக்கிறது. மனுதாரருக்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படுகிறது' என கூறி மனுவை தள்ளுபடி செய்தது.