மழை அடிப்படையில் விவசாய கொள்கை சொட்டுநீர் பாசனத்திற்கு ரூ.440 கோடி
கர்நாடகாவின் சிறிய, மிகச்சிறிய விவசாயிகளுக்கு விவசாயத்தை லாபகரமாக்க 'சம்ருத்தி' திட்டம் மாநிலத்தில் 2025 - 26ல் விவசாய உபகரணங்கள் வாங்க, விவசாயிகளுக்கு உதவித்தொகை வழங்க 428 கோடி ரூபாய் ஒதுக்கீடு மழையை நம்பியுள்ள பகுதிகளில், விவசாய உற்பத்தியை அதிகரிக்க, 1.81 லட்சம் விவசாயிகளுக்கு சொட்டு நீர்ப்பாசன வசதி செய்ய 440 கோடி ரூபாய் துவரம் பருப்பு விளைச்சலை அதிகரிக்க, புதிய தொழில்நுட்பம். இதன் மூலம் துவரம் பருப்பு உற்பத்தியில், கர்நாடகா நாட்டின் முதலிடத்துக்கு கொண்டு வரப்படும். இதன் மூலம் விவசாயிகளின் வருவாயை பெருக்க 88 கோடி ரூபாய் ஒதுக்கீடு மாநிலத்தில் 6,000 சிறிய உணவு தானியங்கள் பதப்படுத்தும் மையங்கள், 14 சாதாரண இன்குபேஷன் மையங்கள்; நடப்பாண்டு 5,000 சிறிய உணவு தானியங்கள் பதப்படுத்தும் மையங்கள் அமைக்கப்படும் 'விவசாய பாக்யா' திட்டத்தின் கீழ், 3 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாய குளங்கள் அமைத்து, மழையை நம்பியுள்ள விவசாய நிலங்களுக்கு நீர்ப்பாசன வசதி. இத்திட்டத்தின் கீழ், நடப்பாண்டு 12,000 விவசாய குளங்கள் அமைக்கப்படும் டிஜிட்டல், ஏ.ஐ., உட்பட மற்ற தொழில்நுட்பங்களை விவசாயத்துக்கு பயன்படுத்த, 'டிஜிட்டல் விவசாய சேவைகள் மையம்' அமைக்கப்படும். இந்த மையம், விளைச்சலை அதிகரிப்பது குறித்து, விவசாயிகளுக்கு ஆலோசனை கூறும் வானிலை மாற்றங்கள், இயற்கை சீற்றங்கள் குறித்து முன் கூட்டியே விவசாயிகளுக்கு தகவல் கூறும் வகையில் வல்லுனர்கள் கமிட்டி அமைக்கப்படும் கர்நாடகாவின் விவசாய பகுதிகளில் மழையை நம்பியுள்ள 64 சதவீதம் பகுதிகளில் சாகுபடியை அதிகமாக்க, 'மழை அடிப்படையிலான விவசாய கொள்கை' வகுக்கப்படும் இயற்கை விவசாயத்தை ஊக்கப்படுத்த, உத்தரகன்னடாவின் ஜோய்டா தாலுகா, மாநிலத்தின் முதல் இயற்கை விவசாய பகுதியாக மாற்றப்படும். இயற்கை விவசாயம் செய்து சாகுபடி செய்யும் உற்பத்திகளுக்கு, மார்க்கெட்டிங் வசதி செய்யப்படும் பெலகாவி, பாகல்கோட், விஜயபுரா, கலபுரகி, மாண்டியா மாவட்டங்களின் 7413.161 ஏக்கர் பகுதிகளில் மண் மற்றும் தண்ணீர் வளத்தை அதிகரிக்க, சர்க்கரை ஆலைகளுடன் ஒருங்கிணைந்து திட்டம் வகுக்கப்படும் விவசாய தொடர்பு மையங்கள் மூலமாக, விவசாய உபகரணங்கள், குறைந்த விலையில் விற்பனை செய்யப்படும் உலக வங்கி உதவியுடன், இதுவரை 31 லட்சம் ஏக்கர் பகுதிகளில் நிலம், மண், இயற்கை வளங்கள் குறித்து ஆய்வு நடத்தப்பட்டது. நடப்பாண்டு 2 லட்சம் ஏக்கர் பகுதிகளில் ஆய்வு நடத்தப்படும். நிலத்தையும், இயற்கை வளங்களையும் ஆய்வு செய்து, அதற்கு தகுந்தார் போன்று விளைச்சல் பயிரிடவும், தேவையான ரசாயன உரங்கள், ஊட்டச்சத்துகளை பயன்படுத்தி, சாகுபடியை அதிகரிக்க விவசாயிகளுக்கு ஊக்கம் அளிக்கப்படும் மாண்டியாவில் விவசாய பல்கலைக்கழகம் அமைக்க, 25 கோடி ரூபாய் நிதி வழங்கி, நடப்பாண்டில் இருந்தே வகுப்புகள் துவக்கப்படும் சிறு தானியங்களை விளைவிக்கும் விவசாயிகளுக்கு, மார்க்கெட்டிங் வசதி செய்யும் நோக்கில், 20 கோடி ரூபாய் செலவில், 'இயற்கை மற்றும் சிறுதானியங்கள் ஹப்' அமைக்கப்படும் பெலகாவியின் அதானி தாலுகாவில் புதிய விவசாய கல்லுாரி அமைப்பது குறித்து, வல்லுனர்களிடம் அறிக்கை கோரப்படும்.இவ்வாறு பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.