உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சசி தரூர் விவகாரம்; கேரளா காங்., நிர்வாகிகளுடன் கட்சி தலைமை நாளை ஆலோசனை

சசி தரூர் விவகாரம்; கேரளா காங்., நிர்வாகிகளுடன் கட்சி தலைமை நாளை ஆலோசனை

புதுடில்லி: சசி தரூரால் கேரள காங்கிரஸ் கட்சிக்குள் சலசலப்பு நிலவி வரும் நிலையில், நாளை (பிப்.,28) ஆலோசனை நடத்த மூத்த கட்சி நிர்வாகிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. முன்னாள் மத்திய அமைச்சர் சசி தரூர், காங்கிரஸ் கட்சி சார்பில் திருவனந்தபுரம் லோக்சபா தொகுதியில் இருந்து நான்காம் முறையாக தொடர்ந்து எம்.பி.,யாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஐ.நா., சபையில் உயர் பதவி வகித்த சசி தரூர், எழுத்தாளர், பேச்சாளர் என பன்முகம் கொண்டவர்.சமீபத்தில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பை, பிரதமர் மோடி சந்தித்ததை வரவேற்றார். அதற்கு காங்கிரசார் எதிர்ப்பு தெரிவித்த போது, 'நம் நாட்டின் நலனை மனதில் வைத்தே பேசினேன். ஒரு அரசியல்வாதி எப்போதுமே, தான் சார்ந்த கட்சியை மனதில் வைத்து பேச முடியாது' என விளக்கம் அளித்தார்.அந்த சர்ச்சை அடங்கிய நிலையில், இடதுசாரி ஆட்சியில் கேரளா முன்னேற்றம் அடைந்துள்ளதாகவும், முதல்வர் பினராயி விஜயன் பொருளாதாரத்தை சிறப்பாக கையாளுவதாகவும் கூறினார். ஆளும் இடதுசாரிகள் குஷியான நிலையில், காங்கிரசார் கடுப்பாகினர்.இதற்கு சசிதரூர் விளக்கம் அளித்த போதும், எனினும், கேரள காங்கிரஸ் தலைவர்கள், தொடர்ந்து சசிதரூரை விமர்சித்து வருகின்றனர். இதையடுத்து, சசிதரூர் கூறியதாவது: காங்கிரசுக்கு நான் தேவை என்றால் கட்சியில் இருக்கிறேன். நான் உங்களுக்கு தேவை இல்லை என்றால் எனக்கு நிறைய வாய்ப்புகள் உள்ளன, எனக் கூறியிருந்தார். கேரளா காங்கிரஸில் தலைமை சரியில்லை என்றும் சசி தரூர் விமர்சனம் செய்திருந்தார். இதற்கு தொண்டர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிளம்பியது; ஆனால் காங்கிரசின் வெவ்வேறு கோஷ்டித்தலைவர்கள் கடும் அதிருப்தி தெரிவித்தனர்.இந்த நிலையில், சசி தரூர் விவகாரம் தொடர்பாக ஆலோசனை நடத்துவதற்காக, கேரளாவைச் சேர்ந்த மூத்த கட்சி நிர்வாகிகளை டில்லிக்கு வருமாறு காங்கிரஸ் கட்சி தலைமை அழைப்பு விடுத்துள்ளது. நாளை மாலை 4.30 மணிக்கு நடக்கும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க சசி தரூருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து சசி தரூர் கூறுகையில், 'அழைப்பின் பேரில் நாளை நடக்கும் கட்சி கூட்டத்தில் நான் பங்கேற்க இருக்கிறேன். பார்ப்போம், என்ன நடக்கிறது,' என்று கூறினார். கேரளாவின் முக்கிய எதிர்க்கட்சியாக காங்கிரஸ் இருந்து வருகிறது. இங்கு அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற இருப்பதால், கட்சியில் ஏற்பட்ட பிரச்னைக்கு தீர்வு காண காங்கிரஸ் மேலிடம் முனைப்பு காட்டி வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

Gopalakrishnan Balasubramanian
பிப் 27, 2025 15:24

பாத்துப்பா - அடிச்சு தூக்கிடுவானுவ அவங்க DNA அப்புடி


M. PALANIAPPAN, KERALA
பிப் 27, 2025 10:56

கேரளா காங்கிரஸில் கோஷ்டி சண்டை என்பது நிரந்தரமான ஒன்று, எனவேதான் காங்கிரஸ் கூட்டணியில் உள்ள முஸ்லீம்லீக் தேர்தலுக்கு முன்பு காங்கிரஸ் ஒரு கட்டுபாடு உள்ள கட்சியாக வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறது. கோஷ்டி பூசல் தொடர்ந்தால் மீண்டும் கம்யூனிஸ்ட் ஆட்சி அமைக்கவே வாய்ப்பு உள்ளது. சசி தரூர் ஒன்றும் அவ்வளவு நல்ல தலைவர் அல்ல


Kumar Kumzi
பிப் 27, 2025 09:57

ஆண்டி கூட்டணி இப்போ கூட்டணியாகிடுச்சி


KavikumarRam
பிப் 27, 2025 09:56

சசிதரூர் வெளிநாட்டில் இருந்து வந்ததாலயும், சிறந்த ஆங்கில புலமையும், காங்கிரசில் இருக்கும் தற்போதைய தலைவர்கள் எவ்விதத் திறமையும் இல்லாமல் இருப்பதால் இவர் எதோ பெரிய அறிவாளி மாதிரி பிம்பப்படுத்தப்படுகிறார். இருந்தாலும் தனது பேச்சால், நிறத்தால் ஒரு கவர்ச்சியான தலைவர். அவ்வளவு தான். மற்றபடி இவரையும் விட்டால் காங்கிரஸ் திருவனந்தபுரத்தில் காலி. சோனியா குடும்பம் தன்னை மீறி ஒரு தலைவரை வளரவிடாது. மொத்தத்தில் காங்கிரஸ் அழியும். அதுதான் பரத்துக்கும் தேவை.


vadivelu
பிப் 27, 2025 09:46

சசி தரூர் தவறான கொள்கைகளையுடைய கட்சியில் இருக்கிறார் , நாட்டுக்கும், மக்களுக்கும் நல்லதை செய்ய அவர் காங்கிரசை விட்டு விலக வேண்டும்


Barakat Ali
பிப் 27, 2025 09:01

தீவிர விசுவாசிகளே இப்படி.. அது சரி... சிவகங்கை சின்னப்பையன் எப்போ??


Nagarajan D
பிப் 27, 2025 10:42

அவன் பேசவே மாட்டான்... அவனுக்கு சரியாக கொடுத்து அவன் வாயை கை கட்சி அடைத்து விடும்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை