உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / காஷ்மீரில் பனி ஹிமாச்சலில் வௌ்ளம்

காஷ்மீரில் பனி ஹிமாச்சலில் வௌ்ளம்

உதம்பூர்: ஜம்மு - காஷ்மீரின் உதம்பூரில் கடந்த இரண்டு நாட்களாக பனி மற்றும் மழை பெய்தது. ராம்சூ மற்றும் காசிகுண்ட் இடையே சாலையை, 1 அடி உயரத்திற்கு பனி மறைத்திருந்தது. நஷ்ரி மற்றும் நவ்யுக் சுரங்கப்பாதை இடையே பாறைகள் மற்றும் மண் சரிவு ஏற்பட்டது. இதனால் ஜம்மு - -ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலை மூடப்பட்டது. உதம்பூரில், லாரி, கார் மற்றும் பேருந்துகள் உட்பட ஏராளமான வாகனங்கள் வரிசையாக நிறுத்தப்பட்டன.இதே போல் உத்தரகண்ட், ஹிமாச்சல பிரதேசத்தில் பல இடங்களில் நேற்று பலத்த மழை பெய்தது. இதில், சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. மழை காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. தலைநகர் டேராடூனில் மழை பெய்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை