உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / நைஸ் ரோட்டில் அதிநவீன கேமரா வாகனங்கள் வேகத்துக்கு கடிவாளம்

நைஸ் ரோட்டில் அதிநவீன கேமரா வாகனங்கள் வேகத்துக்கு கடிவாளம்

பெங்களூரு: பெங்களூரு நகரில் இருந்து ஓசூர் ரோடு, பன்னர்கட்டா ரோடு, கனகபுரா ரோடு, மைசூருரோடு, துமகூரு ரோடுகளை, 'நைஸ்' எனும் நந்தி இன்பிராஸ்டிரக்சர் காரிடார் என்டர்பிரைசஸ் ரோடு இணைக்கிறது. 40 கி.மீ., உள்ள இந்த ரோட்டில் தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன.இந்த ரோட்டில், வாகனங்கள் 100 கி.மீ., வேகத்தில் செல்ல வேண்டும் என்று கட்டுப்பாடு உள்ளது. ஆனால் வாகன ஓட்டிகள் அதிவேகமாக செல்கின்றனர். இதனால் அங்கு அடிக்கடி விபத்துகள் நடக்கின்றன.கடந்த வாரம் நைஸ் ரோட்டில் நடந்த இரண்டு விபத்துகளில், நான்கு பேர் உயிரிழந்தனர். போலீசார் விசாரணையில் அதிவேகமாகவும், கவனக்குறைவாகவும் வாகனங்கள் ஓட்டியதால் விபத்து நடந்தது தெரிந்தது.நைஸ் ரோட்டில் விபத்துகளை தடுப்பது தொடர்பாக கர்நாடக சாலை போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு துறை கூடுதல் டி.ஜி.பி., அலோக் குமார், தனது துறைக்கு உட்பட்ட போலீஸ் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.அலோக் குமார் கூறியதாவது:பெங்களூரு -- மைசூரு சாலையில் விபத்துகளை குறைக்க, வாகனங்களின் வேகங்களை கண்காணிக்க அதிநவீன கண்காணிப்பு கேமராக்களை பொருத்தினோம். இதனால் வாகனங்கள் வேகமாக செல்வதும், விபத்துகளும் குறைந்துள்ளன. இதே நடைமுறையை நைஸ் ரோட்டிலும் கொண்டு வரலாம். அதிநவீன கேமராக்கள் பொருத்தப்படும் போது, வாகனங்கள் வேகமாக செல்வது கட்டுப்படுத்தப்படும்.'சீட் பெல்ட்' அணியாமல் வாகன ஓட்டிகள் வாகனம் ஓட்டினாலும், அதிநவீன கண்காணிப்பு கேமராக்கள் துல்லியமாக புகைப்படம் எடுக்கும். இதன் மூலம் வாகன ஓட்டிகளிடம் அபராதம் வசூலிக்கலாம்.நைஸ் ரோட்டில் வாகனங்கள் போக்குவரத்து விதிகளை மீறி செல்வதை நானே பார்த்திருக்கிறேன். அரசின் அனுமதி பெற்று கூடிய விரைவில், நைஸ் ரோட்டில் அதிநவீன கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை