உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சோசலிசம் பற்றி தேஜஸ்வியால் தொடர்ந்து ஐந்து நிமிடம் பேச முடியுமா :பிரசாந்த் கிஷோர் கேள்வி

சோசலிசம் பற்றி தேஜஸ்வியால் தொடர்ந்து ஐந்து நிமிடம் பேச முடியுமா :பிரசாந்த் கிஷோர் கேள்வி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பாட்னா: லாலுவின் மகனான தேஜஸ்வி யாதவ் ஒன்பதாம் வகுப்பு மட்டுமே படித்துள்ளார். அவரால் ஐந்து நிமிடம் தொடர்ந்து சோசலிசம் குறித்து பேச முடியுமா என தேர்தல் வியூக மன்னான பிரசாந்த் கிஷோர் கேள்வி எழுப்பி உள்ளார்.தேர்தல் வியூகத்தின் மன்னன் என கூறபபடும் பிரசாந்த் கிஷோர் ஜன் சூராஜ் என்ற கட்சியை பீகார் மாநிலத்தில் துவக்கி உள்ளார் . தொடர்ந்து அவர் சட்டசபை தேர்தலிலும் போட்டியிட உள்ளார். இதனை முன்னிட்டு வரும் 10 ம் தேதி முதல் மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். போஜ்பூரில் நடைபெற்ற கூட்டத்தில் அவர் பேசியதாவது: மாநிலத்தில் வளங்கள் இல்லாத காரணத்தால் ஒருவர் கல்வி கற்க முடியவில்லை என்றால், அது புரியும். ஆனால் ஒருவரின் பெற்றோர் முதலமைச்சராக இருந்தும் அவரால் 10ம் வகுப்பில் தேர்ச்சி பெற முடியவில்லை.தேஜஸ்வியால் ஒரு பேப்பரில் இருப்பதை படிக்காமல் சோசலிசம் பற்றி ஐந்து நிமிடம் பேசுமாறு சவால் விடுத்தார், திரு யாதவுக்கு இதுபோன்ற கருத்துகளைப் பற்றி விவாதிக்கத் தேவையான புரிதல் இல்லை.GDP மற்றும் GDP வளர்ச்சிக்கு இடையே உள்ள வித்தியாசம் குறித்து அவருக்கு தெரியாது.பீகார் முன்னாள் முதல்வர் லாலு யாதவின் மகன் என்பதும், குடும்ப உறவுகளின் அடிப்படையில் ராஷ்டிரிய ஜனதா தளத்தின் தலைவர் என்பதும் மட்டுமே.லாலு யாதவின் மகன் என்பதைத் தாண்டி நற்பெயரைக் கட்டியெழுப்ப வேண்டுமானால், யாதவ் கடுமையாக உழைத்து, செயல்களின் மூலம் தன்னை நிரூபிக்க வேண்டும்.உண்மையான அக்கறையுள்ள கட்சிகள் முதலில் மக்கள் தொகை கணக்கெடுப்பை அவர்கள் அதிகாரத்தில் உள்ள மாநிலங்களில் செயல்படுத்தி அந்தந்த சமூகங்களுக்கு பொருளாதார நன்மைகளை வழங்க வேண்டும்.காங்கிரஸ் கட்சிக்கு உண்மையான அக்கறை இருந்தால் முதலில் அவர்கள் ஆட்சியில் உள்ள மாநிலங்களில் ஜாதிவாரி கணக்கெடுப்பை அமல்படுத்தி, அந்தந்த சமூகத்தினருக்கு பொருளாதார பலன்களை வழங்க வேண்டும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

Kasimani Baskaran
செப் 04, 2024 05:45

ஜாதி அரசியலில் ஒருவருக்கு தகுதி தேவையில்லை. ஓவர் குறிப்பிட்ட ஜாதியினர் அதிகம் இருக்கிறார்கள் என்றால் அதன் தலைவரை கவனித்து அதன் பின்னர் ஓட்டு சேகரித்தால் சிந்தாமல், சிதறாமல் வாக்குகளை அள்ளிவிட முடியும்.


நிக்கோல்தாம்சன்
செப் 04, 2024 05:21

அட நீங்க கால்மேல் கால் போட்டு வாங்கி தந்த ஆட்சியில் இருப்பவர்களின் மகன் படி என்றால் பாலிடால் குடித்து அலைந்தான் , அவனிடம் இது போன்று உங்களால் கேள்வி கேட்க தைரியம் இருக்கா ?


hariharan
செப் 03, 2024 23:18

அட நம்ம பிரசாந்த் கிஷோர், இங்க உள்ள கைநாட்டு கேஸுகள ஆட்சியில் அமரவைத்தவராயிற்றே. இங்கமட்டும் என்ன வாழுதாம்.


Anonymous
செப் 03, 2024 22:58

மெத்த படிச்ச மேதாவி, நீங்க என்ன கிழிச்சீங்க? உங்க புத்திசாலித்தனத்தை, காசுக்கு வைத்து, அந்த வாங்குன காசுக்கு, துண்டு சீட்டு வச்சு படிக்க தடுமாருற, ஒரு மேதாவியை தமிழ்நாட்டுல ஜெயிக்க வச்சு, தமிழ் மக்கள் வயித்தெரிச்சல கொட்டிக்கிட்டீங்க, எங்க தமிழ்நாட்டை நாசமாக்கி, இப்போ உங்க பிஹார்ல இருக்குற நொள்ள, நொட்டைய பத்தி ரொம்ப பெரிய மனுஷன் மாதிரி பேசவந்துட்டீங்க, கேவலம் காசுக்காக, தமிழ்நாட்டு மக்கள் தலையில மண் வாரி போட்ட குற்ற உணர்வே இல்லாம இருக்கீங்க, எப்படி இப்படி இருக்க முடியுது பிரஷாந்த் கிஷோர் சார்?


Barakat Ali
செப் 03, 2024 22:36

நீங்கள் டிரெயினிங் கொடுத்ததால் எங்கள் துக்ளக்கார் பேசுவார் .....


Ramesh Sargam
செப் 03, 2024 22:36

அதேபோல் தமிழகத்தில் உள்ள ஒரு அமைச்சர் சனாதானத்தை எதிர்க்கிறார். முதலில் சனாதானம் என்றால் என்ன என்று தெரிந்திருக்கவேண்டும். அது என்னவென்று தெரியாமலே அந்த அமைச்சர் வாரிசு அமைச்சர் சனாதானத்தை எதிர்க்கிறார். அவரால் கூட ஒரு ஐந்து நிமிஷம் சனாதானத்தை பற்றி பேச முடியாது.


Balaji
செப் 04, 2024 00:26

அதெல்லாம் நிறையவே பேசுவானுக.. தீண்டாமை, பார்ப்பனீயம், அந்த ஈயம் இந்த பித்தளை என்று நிறையவே உருட்டுவார்கள்.. அப்படித்தானே பேசிக்கொண்டிருக்கிறார்கள் சனாதனம் என்றால் என்னவென்றே தெரியாமல்.. ஹி ஹி..


முக்கிய வீடியோ