உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கடனை திருப்பி கேட்ட பெண் கொலை உடலை புதைத்து ஓடியவருக்கு வலை

கடனை திருப்பி கேட்ட பெண் கொலை உடலை புதைத்து ஓடியவருக்கு வலை

ராம்நகர் : பெண்ணை கொலை செய்து, உடலை புதைத்து விட்டு தப்பியோடிய நபரை, போலீசார் தேடுகின்றனர்.ராம்நகர், கனகபுராவின், சீனிவாசனஹள்ளி கிராமத்தில் வசித்தவர் சுனந்தம்மா, 55. இவரிடம் இதே கிராமத்தை சேர்ந்த ரவிகுமார், 43, என்பவர் 20,000 ரூபாய் கடன் வாங்கினார். ஓராண்டு ஆகியும் கடனை திருப்பி தரவில்லை. பல முறை கேட்டும் கடனை திருப்பி தருவதில், ஆர்வம் காண்பிக்கவில்லை.இந்நிலையில் பணம் தருவதாக கூறி, நேற்று முன்தினம் சுனந்தம்மாவை, டி.கொல்லரஹள்ளிக்கு வரும்படி அழைத்தார். இவரும் பணம் வாங்கி வருவதாக குடும்பத்தினரிடம் கூறிவிட்டு சென்றார். இரவாகியும் வீடு திரும்பவில்லை.பல இடங்களில் தேடிய குடும்பத்தினர், கனகபுரா ஊரக போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசாரும் சுனந்தம்மாவை தேடி வந்தனர்.இந்நிலையில் நேற்று மதியம், டி.கொல்லரஹள்ளியில் வெங்கடேஷ் நாயக் என்பவரின் தோட்டத்தில், மண்ணை தோண்டும் கடப்பாரை, மண் வெட்டியை காணாமல் தேடினார். அப்போது தோட்டத்தின் மூலையில் கடப்பாரை தென்பட்டது. அதை கொண்டு வர அங்கு சென்ற போது, அரை, குறையாக தோண்டிய பள்ளத்தில், உடலின் தலைமுடி தெரிந்தது.இதை கண்டு அதிர்ச்சி அடைந்த வெங்கட நாயக், பள்ளத்தை தோண்டி பார்த்த போது பெண்ணின் உடல் கிடந்தது. உடனடியாக போலீசாருக்கு தகவல் கூறினார். அங்கு வந்த போலீசார் பெண்ணின் உடலை பார்வையிட்ட போது, அது காணாமல் போன சுனந்தம்மா என்பது தெரிந்தது.கடனை திருப்பி தருவதாக கூறி, சுனந்தம்மாவை வரவழைத்து அடித்து கொலை செய்த ரவி, உடலை தோட்டத்தில் புதைத்துவிட்டு தப்பியோடியுள்ளார். அவரை போலீசார் தேடுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ