உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மஹா., முதல்வருக்கு பாக்.,கிலிருந்து மிரட்டல்

மஹா., முதல்வருக்கு பாக்.,கிலிருந்து மிரட்டல்

மும்பை: பாகிஸ்தானிலிருந்து வந்த வாட்ஸாப் தகவலில், 'மஹாராஷ்டிரா முதல்வரும், பா.ஜ.,வைச் சேர்ந்தவருமான தேவேந்திர பட்னவிஸ் அலுவலகம் தகர்க்கப்படும்' என, மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, மும்பை போலீசார், முதல்வர் அலுவலகத்திற்கு பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளார்.பாகிஸ்தானைச் சேர்ந்த மாலிக் ஷாபாஸ் ஹிமாயூன் ரசா தேவ் என பெயர் குறிப்பிட்டிருந்த அந்த போன் எண்ணிலிருந்து மிரட்டல் வந்ததை அடுத்து, அந்த நபர் மீது வழக்கு பதிவு செய்துள்ள மும்பை போலீசார், இது குறித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ