உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / நகர முடியாமல் தவிக்கும் கவர்னர் காங்கிரசால் தொல்லை; ஜனாதிபதியிடம் புகார்

நகர முடியாமல் தவிக்கும் கவர்னர் காங்கிரசால் தொல்லை; ஜனாதிபதியிடம் புகார்

பெங்களூரு, கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. இங்குள்ள 'மூடா' எனும் மைசூரு மேம்பாட்டு ஆணையம் சார்பில், முதல்வரின் மனைவி பார்வதிக்கு, 14 மனைகள் ஒதுக்கப்பட்டன.இந்த விவகாரத்தில் முறைகேடு நடந்துள்ளதாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில், முதல்வர் மீது விசாரணை நடத்த, கர்நாடக கவர்னர் தாவர்சந்த் கெலாட், கடந்த மாதம் 17ம் தேதி அனுமதி அளித்தார்.இந்த விவகாரத்தில் கவர்னரை கண்டித்து, காங்கிரசார் மாநிலம் முழுதும் போராட்டம் நடத்தினர்.நம் அண்டை நாடான வங்கதேசத்தில் அந்நாட்டில் அப்போது பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா வீட்டை முற்றுகையிட்டு, அவர் நாட்டை விட்டு வெளியேறும் சூழ்நிலை அண்மையில் ஏற்பட்டது.'இதேபோன்ற நிலைமை, கர்நாடக கவர்னருக்கும் ஏற்படும்' என காங்கிரஸ் எம்.எல்.சி., ஐவான் டிசோஜா மிரட்டல் விடுத்திருந்தார். கவர்னர் மாளிகை முற்றுகையிடும் போராட்டத்தையும் காங்கிரஸ் நடத்தியது.இதையடுத்து, முதல்வர் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசு மீது குற்றஞ்சாட்டி, ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு, கவர்னர் தாவர்சந்த் கெலாட் சமீபத்தில் புகார் அறிக்கை அனுப்பியுள்ளார்.கடிதம் குறித்து வெளியான தகவல்:காங்கிரஸ் போராட்டத்தால், பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. உளவுத்துறை ஆலோசனையின் அடிப்படையில் புல்லட் புரூப் கார் பயன்படுத்தத் துவங்கியுள்ளேன்.ராஜ்பவன் மீது மாநில அரசு தொடர்ந்து நெருக்கடி கொடுக்கிறது. மாநிலம் முழுதும் போராட்டம் நடத்தி, தன்னுடைய உருவப்படம் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளன. கவர்னர் மாளிகைக்குள் நுழையும் வகையில் மிரட்டல் விடுத்துள்ளனர்.இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த தகவலை, மத்திய உள்துறை அமைச்சகத்தும் நீண்ட அறிக்கையாக கவர்னர் அனுப்பியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Lion Drsekar
செப் 07, 2024 07:38

அரசியல் ஆட்சியினர்களுக்கு சுதந்திர போராட்ட வீரர்களைப்பற்றிய பாடங்களை படிக்கவைத்து தேர்வு வைத்து தேர்வும் எழுதிவைத்து அவர்களைப்போல் வாழவேண்டும் என்று தேர்தல் கமிஷன் நடவடிக்கை எடுத்தால் மட்டுமே திருந்தும் . தேர்தல் நடத்துவதை மட்டுமே குறிக்கோளாகக்கொண்ட தேர்தல் கமிஷன் சட்டத்தை தானே கையில் எடுத்துக்கொண்டு திரு சேஷனைப்போல் செயல்பட்டால் மட்டுமே எல்லா கட்சிகளும் இருந்தும். மேலும் பதவிப்பிரமணத்தின்போது ஏற்றுக்கொள்ளும் உறுதிமொழியையும் கண்டிப்பாக பின்பற்றவேண்டும் என்றும் அவர்கள் மற்றும் அவர்கள் குடும்பம் தியாக உள்ளதோடு செயல்படவைக்கவேண்டியது தேர்தல் கமிஷன் கடமை, மக்கள் சபைக்கு தினமும் கண்டிப்பாக வரவேண்டும் என்றும் சட்டம் கொண்டுவரவேண்டும், மக்கள் வரிப்பணத்தில் அம்பலம், குடும்ப பென்சன் 5 ஆண்டுகள் பணிசெய்டயாலே வாங்கும் இவர்கள் கண்டிப்பாக மக்கள் மாமன்றங்கள் கூடும்போது தவிர்க்க முடியாத காரணத்துக்கு மட்டுமே விடுமுறை எடுக்கவேண்டும் என்ற சட்டமும் கொண்டுவரவேண்டும், சாலை பழுது, கொலை, கொள்ளை, வழிப்பறிக்கு யாருமே குரல் கொடுப்பதில்லை . ஆகவே விபத்தை தவிர்க்க மக்கள் குறைகளை தேர்தல் கமிஷனுக்கு அனுப்பவேண்டும் காரணம் இவர்கள்தான் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரநிதிகள் என்று ஆணையை கையில் கொடுக்கிறார்கள், அப்படி இருக்க அவர்கள் சரியாக பணியாற்றவில்லை என்றால் போய் முறையிடுவது, இவர்கள் தங்களது தேவைக்கு தங்கள் தொண்டர்களை பயன்படுத்தி சட்டத்துக்கு புறம்பாக செயல்படுகிறார்கள் ஆனால் வரியையும் கட்டி, பலனையும் பெறமுடியாமல் தவிக்கும் மக்களுக்கு யார்தான் இருக்கிறார்கள், நீதிமன்றத்தையும் இவர்கள் ஆட்டிப்படைக்கின்றனர், மக்களுக்கு நல்லது செய்ய தினம் தினம் சுதந்திரப்போராட்ட வீரர்களின் வாழ்க்கை வரலாற்றை முறையாக கற்பித்தால் மட்டுமே விளங்கும், . வந்தே மாதரம்


Kasimani Baskaran
செப் 07, 2024 05:37

தீம்காவிடம் பாடம் படித்துவிட்டு பின்விளைவுகளைப்பற்றி சிந்திக்காமல் இது போல செயல்படுவது ஆளும்கட்சிக்கு மட்டுமல்லாது மாநிலத்துக்கும் பின்னடைவை ஏற்படுத்தும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை