உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மின்சார ரயிலில் பயணித்த மத்திய ரயில்வே அமைச்சர்

மின்சார ரயிலில் பயணித்த மத்திய ரயில்வே அமைச்சர்

மும்பை: மும்பையில் மின்சார ரயிலில் பொதுமக்களுடன் பயணித்து அவர்களிடம் கலந்துரையாடினார் மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ்.மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ், இன்று ( செப்.,13) தெற்கு மும்பை சத்ரபதி சிவாஜி மகராஜ் டெர்மினல் ரயில் நிலையம் வந்தார் அங்கிருந்து மின்சார ரயிலில் ஏறி மத்திய மும்பையின் பஹான்துப் ரயில்நிலையத்தில் இறங்கினார். இதன் மூலம் 27 கி.மீ. தூரம் மின்சார ரயிலில் பொதுமக்களுடன் பயணித்தார். இதன் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. இப்பயணத்தின் போது பொதுமக்களிடம் மின்சார ரயிலில் பயணித்தின் போது சந்திக்கும் பிரச்னைகள், அனுபவங்களை கேட்டறிந்தார்.பின்னர் செய்தியாளர்களிடம் கூறியது, மும்பை பெருநகரப் பகுதியில் 301 கி.மீ. தொலைவில் பாதைகளை இணைக்கும் வகையில் ரூ.16,240 கோடி செலவில் 12 திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளது என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Amruta Putran
செப் 13, 2024 23:06

Stunt master Pappu travels to find problem and politicize it, Railway Minister Ashwini travels to find the problem and rectify


xyzabc
செப் 13, 2024 21:45

Well done Ashwini sir


ramarajpd
செப் 13, 2024 20:46

அடுத்த RSS தலைவர் மோடி.


சாண்டில்யன்
செப் 13, 2024 20:32

ஊர் முழுக்க மின்சார எஞ்சின்களால்தான் ரயில்கள் இயக்கப்படுகின்றன பயணிகள் கூட சுபர்பன் ரயில் என்றே குறிப்பிடுகிறார்கள் அப்படியிருக்க இன்னும் நம் ஊடகங்கள் மட்டும் பத்தாம் பசலித்தனமாக மின்சார ரயில் என்று சொல்வதேன்?


RAMAKRISHNAN NATESAN
செப் 13, 2024 20:25

ஐம்பத்தாறு இன்ச்சுக்கு போட்டி உள்ளே இருந்தே உருவாகுது .........


புதிய வீடியோ