உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / புதுமையான கண்டுபிடிப்புகளை உலகிற்கு வழங்குகிறோம் பிரதமர் மோடி பெருமிதம்

புதுமையான கண்டுபிடிப்புகளை உலகிற்கு வழங்குகிறோம் பிரதமர் மோடி பெருமிதம்

புதுடில்லி : “இந்த உலகுக்கு பூஜ்ஜியத்தை கொடுத்தது நம் நாடு. தற்போது உலகுக்கு புதுமை கண்டுபிடிப்புகளுடன், பிரச்னைகளுக்கான புதுமையான தீர்வுகளையும் வழங்குகிறோம்,” என, பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டார்.டில்லியில் நேற்று நடந்த தனியார் 'டிவி சேனல்' துவக்க விழாவில் பங்கேற்ற பிரதமர் மோடி பேசியதாவது:இந்தியாவை, பல ஆண்டுகளாக தங்களுடைய பின்புலத்தில் இருந்து சேவையை அளிக்கும் நாடாக உலக நாடுகள் பார்த்தன.

தொழிலாளர் வளம்

அதாவது உலக நாடுகளில் புதிய கண்டுபிடிப்புகள் நடக்கும் நேரத்தில், அதை பயன்படுத்தும் நாடாக இந்தியாவை பார்த்தனர். ஆனால், தற்போது நிலைமை மாறியுள்ளது.உலகின் உற்பத்தி தொழிற்சாலையாக இந்தியா விளங்குகிறது. நம்மிடம் இருப்பது வெறும் மனிதவளம் மட்டுமல்ல, உலகை மாற்றக்கூடிய தொழிலாளர் வளம். ராணுவ தளவாட தயாரிப்பில் இருந்து, இன்ஜினியரிங், தொழில்நுட்ப உற்பத்தியில் நாம் முன்னேறி வருகிறோம்.'உள்ளூர் தயாரிப்பை ஊக்குவிப்போம்' என்ற கோஷத்துடன், அந்த உள்ளூர் தயாரிப்பு உலகுக்கானதாக இருக்க வேண்டும் என்றோம். நம் தயாரிப்புகளுக்கு தற்போது உலகெங்கும் கிராக்கி உள்ளது. எவ்வித, 'மேக்கப்' போடாமல், நம் பொருட்களை அதன் உண்மை குணத்துடன் உலகுக்கு வழங்குகிறோம். அது, உலகெங்கும் சிறப்பான வரவேற்பை பெற்றுள்ளது.டிஜிட்டல் தொழில்நுட்பத்துக்கான, நம் யு.பி.ஐ., செயலியை உலகின் பல நாடுகள் பயன்படுத்துகின்றன. கொரோனா காலத்தில் நம் தடுப்பூசிகளுக்கு உலகெங்கும் கிடைத்த வரவேற்பே, இவற்றுக்கெல்லாம் சாட்சியாக உள்ளன.

நல்ல பெயர்

நல்ல தரம், அதே நேரத்தில் குறைந்த செலவில் கிடைக்கும் என்பதால், நம் நாட்டின் பொருட்களுக்கு உலகெங்கும் நல்ல பெயர் கிடைத்துள்ளது.அத்துடன், வினியோக சங்கிலியில் இந்தியாவை முழுமையாக நம்பலாம் என்பதையும் உலக நாடுகள் ஏற்றுள்ளன.இந்த உலகுக்கு பூஜ்ஜியத்தை அளித்தது நம் நாடு. தற்போது பல புதுமை கண்டுபிடிப்புகளையும், பிரச்னைகளுக்கு புதுமையான தீர்வுகளையும் அளித்து வருகிறோம்.இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ